டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சன்னி தியோலும், சித்தி ஹேமமாலினியும் அருகருகே உட்கார முடியாதாம்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: சன்னி தியோலும் அவரது மாற்றான் தாய் ஹேமமாலினியும் நாடாளுமன்றத்தில் ஒன்றாக உட்கார வைக்கப்படவில்லையாம்.

17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 300 பேர் முதல் முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் சன்னி தியோல், பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், சாத்வி பிரக்யா சிங் தாகூர் மற்றும் நடிகர் ரவி கிஷான் உள்ளிட்டோர் முதல் முறை எம்பியாக வெற்றி பெற்றுள்ளனர்.

என்னதான் பெரிய பிரபல நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களது சீனியாரிட்டியை கருத்தில் கொண்டே நாடாளுமன்றத்தில் இடம் அளிக்கப்படுகிறது.

மக்களவை தேர்தலில் சறுக்கல்.. உறுப்பினர்கள் கட்சி தாவல்.. அதிரடியாக அமைச்சரவையை மாற்றிய மம்தா மக்களவை தேர்தலில் சறுக்கல்.. உறுப்பினர்கள் கட்சி தாவல்.. அதிரடியாக அமைச்சரவையை மாற்றிய மம்தா

பின் இருக்கை

பின் இருக்கை

உதாரணமாக இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஹேமமாலின் மத்தியில் உள்ள இருக்கையிலும் குருதாஸ்பூரில் எம்பியா தேர்வு செய்யப்பட்டவரும் அவரது கணவரின் மகன் சன்னி தியோலுக்கு பின் இருக்கையில் இடம் வழங்கப்படும்.

சாத்வி

சாத்வி

அது போல் சாத்வி பிரக்யாவை காட்டிலும் வயதில் சிறிய அனுராக் தாகூருக்கு பின்னால் சாத்விக்கு இடம் வழங்கப்படும். ஏனெனில் அனுராக் 4-ஆவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சாத்விக்கோ இது முதல்முறை.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு வலது புறத்தில் உள்ள இருக்கைகள் ஆளும் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சியினருக்கும் ஒதுக்கப்படும். அது போல் இடது புறத்தில் உள்ள இருக்கைகள் எதிர்க்கட்சியினருக்கு வழங்கப்படும்.

தலைவர்களும்

தலைவர்களும்

முதல் வரிசையில் பிரதமர், கேபினெட் அமைச்சர்கள், மற்றும் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்கள் அமருவர். அது போல் சபாநாயகருக்கு இடது புறத்தில் உள்ள முதல் வரிசையில் எதிர்க்கட்சி தலைவரும் மற்ற கட்சி தலைவர்களும் அமர்ந்திருப்பர்.

 கடைசி பெஞ்ச்

கடைசி பெஞ்ச்

நடுவில் உள்ள வரிசையில் மூத்த எம்பிக்களும், கடைசி வரிசையில் புதிதாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடம் வழங்கப்படும். அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் வரை அவர்களுக்கு கடைசி பெஞ்ச்.

முதல் தாரம்

முதல் தாரம்

தர்மேந்திராவை கடந்த 1979-ஆம் ஆண்டு இரண்டாவது தாரமாக நடிகை ஹேமமாலினி திருமணம் செய்து கொண்டார். அந்த நாள் முதல் தனக்கும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் குறித்த உறவு குறித்து அவர் பேசியதே இல்லை. இந்த நிலையில் அவரது 69-ஆவது பிறந்தநாளான கடந்த 2017-ஆம் ஆண்டு பியாண்ட் டிரீம் கேர்ள் என்ற சுயசரிதையில் தனக்கும் கணவரின் முதல் தாரத்தின் பிள்ளைகளான சன்னி தியோலுக்கும் பாபி தியோலுக்கும் உள்ள உறவு குறித்து மவுனத்தை கலைத்தார் ஹேமமாலினி. தேர்தலில் வெற்றி பெற்ற ஹேமமாலினிக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகள் ஈஷா தியோல், தனது அண்ணன் சன்னிக்கும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Hemamalini and her stepson Sunny Deol not sit together in Parliament because of seating arrangement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X