டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: விண்வெளி துறையானது நாட்டுக்கு நாடு புதிய புதிய யுத்திகளை கையாண்டு வரும் நிலையில் இதுவரை நிலவில் கால் பதித்த நாடுகள் எவை என்பது குறித்து பார்ப்போம்.

என்னதான் புது புது தொழில்நுட்ப விண்வெளி ஆய்வு என்பது அதிக செலவு கொண்ட அதே நேரத்தில் கடினமான பணியாகும். விண்வெளி ஆய்வு, வளர்ச்சி, விண்கலங்களை விண்ணிற்கு செலுத்துவது உள்ளிட்டவைகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுகிறது.

அது போல் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நிதி அதிகம் செலவாகிறது. இது போல் செலவு செய்து விண்கலங்கள், செயற்கைகோள்களை நன்கு சரிபார்த்து அனுப்பினாலும் அதில் ஏதாவது தவறு நடந்து விபத்துகள் நேரிடுகின்றன.

செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2 செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2

செயற்கைகோள்

செயற்கைகோள்

கடந்த 1986-ஆம் ஆண்டும் 2003-ஆம் ஆண்டும் விண்ணுக்கு செயற்கைகோளை அனுப்பிய போது விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா, ஐரோப்பியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.

அமெரிக்கா

அமெரிக்கா

இவற்றில் அமெரிக்கா மட்டுமே முதல் முறையாக மனிதனை நிலவிற்கு அனுப்பியது. ஏனைய நாடுகள் ஆளில்லா விண்கலத்தையே நிலவுக்கு அனுப்பியுள்ளன. ஆளில்லா விண்கலங்களையே நிலவிற்கு அனுப்பி வந்த அமெரிக்காவின் நாசா மையம் கடந்த 1969-ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்டிராங் என்பவரை விண்ணிற்கு அனுப்பியது. இதையடுத்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. இதன் ஆய்வு காலம் கடந்த 2014-ஆம் ஆண்டு முடிவடைந்தது.

ரஷ்யா அனுப்பிய விண்கலம்

ரஷ்யா அனுப்பிய விண்கலம்

அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அமெரிக்கர்கள் மத்தியில் தங்கள் கவுரவத்தை பெற ரஷ்யாவும் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டது. இந்த விண்வெளி ஆய்வுகளை அது ரகசியமாகவே செய்து வந்தது. அமெரிக்காவை போல் விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா தோல்வியுற்றது. 1958-ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை ஆளில்லா விண்கலத்தையே நிலவுக்கு அனுப்பிய ரஷ்யா, யூரி காகரின் என்பவரை முதல்முதலாக நிலவுக்கு அனுப்பியது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலக போருக்கு பின்னர் தொழில் துறையில் மட்டுமே ஜப்பான் முன்னேறவில்லை. ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதிலும் முன்னேறியது. ஹிட்டன், செலினே என்ற இரு விண்கலங்களை நிலவுக்கு கடந்த 1990-ஆம் ஆண்டு மற்றும் 2007-ஆம் ஆண்டு அனுப்பியது.

சீனாவும் அப்படித்தான்

சீனாவும் அப்படித்தான்

சீனாவும் நிலவுக்கு இரு ஆர்பிட்டர்களை அனுப்பியுள்ளது. முதலில் சாங் இ-1 (Chang'e-1) என்ற விண்கலத்தை 2007-ஆம் ஆண்டு அனுப்பியது. பின்னர் சாங் இ-3 என்ற விண்கலத்தையும் அனுப்பியது.
பூமி பார்த்திராத நிலவின் ஒரு பகுதிக்கு சீனா லேண்ட் ரோவரை இந்த ஆண்டு அனுப்பியுள்ளது. அதன் பெயர் சாங்-இ 4 ஆகும். நிலவில் யாரும் பார்த்திராக ஒரு பகுதிக்கு உலகிலேயே முதல்முறையாக விண்கலத்தை அனுப்பிய நாடு சீனாவாகும்.

சந்திரயான் 1, 2

சந்திரயான் 1, 2

இந்தியா சந்திரயான் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு அனுப்பியது. இது 2009-இல் செயலிழந்தது. அது போல் சந்திரயான் 2 என்ற விண்கலமும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது. அது கடந்த ஜூலை 22-ஆம் தேதி அனுப்பப்பட்டது. அது போல் ஐரோப்பியாவும் கடந்த 2003-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி அதுவும் புகைப்படங்களை வெளியிட்டது.

English summary
Here are the list of countries that have been to Moon. The United States, Russia (the USSR), Japan, China, the European Space Agency, and India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X