டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1970-ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை.. ஒடிஸாவை புரட்டி போட்ட புயல்கள்!.. ஓர் அலசல்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒடிஸாவில் 1999-ஆம் ஆண்டு முதல் இதுவரை பாதிப்பை ஏற்படுத்திய முக்கிய புயல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

Recommended Video

    Explained How Cyclones are named | Amphan cyclone

    1970 ஆம் ஆண்டு ஒடிஸாவில் 5 லட்சம் பேரை கொன்ற புயல் போலா புயலாகும். 1999ஆம் ஆண்டுக்கு பிறகு 2008-இல் வந்த நர்கிஸ் புயல் மாநிலத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இது 12.1 பில்லியன் டாலர் மதிப்பிற்கு சேதத்தை ஏற்படுத்தியது.

    கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய கடலோரத்தில் தோன்றிய மிக தீவிரமான புயல் ஒடிஸா புயலாகும். இதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு ஃபைலின் புயல் உருவானது. 2014-இல் ஹூதூத் புயலும், 2018-இல் டிட்லி புயலும் உருவானது.

    Cyclone Amphan: வங்கக் கடல் இதுவரை கண்டிராத அதி தீவிர வலுவான புயலாகி வேகமெடுக்கும் Cyclone Amphan: வங்கக் கடல் இதுவரை கண்டிராத அதி தீவிர வலுவான புயலாகி வேகமெடுக்கும் "சூறாவளி" ஆம்பன்

    ஒடிஸா புயல்

    ஒடிஸா புயல்

    கடந்த 1999ஆம் ஆண்டு ஒடிஸா புயல் உருவானது. இது வட இந்திய பெருங்கடலில் உருவாகிய மிகப் பெரிய வெப்பமண்டல புயலாகும். இது ஒடிஸா பகுதியை மிகவும் தாக்கி அழிவை ஏற்படுத்தியது. ஒடிசாவின் பன்னிரெண்டு மாவட்டங்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டன. இம்மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    தீவிர புயல்

    தீவிர புயல்

    2013-இல் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்திய புயல்களுள் மிகவும் தீவிரமான புயல் ஃபைலின் ஆகும். அந்தமான் பகுதியில் சாதாரண புயலாக உருவாகி பின்னர் ஆக்ரோஷ புயலாக மாறியது. இந்த புயல் ஆந்திரா- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்த போது கடல் அலைகள் 3 மீட்டர் வரை உயர்ந்தன. 14 ஆண்டுகளில் இந்தியாவை தாக்கிய கடும் புயல்களில் ஒன்றானது.

    ஹூதூத் புயல் உருவானது

    ஹூதூத் புயல் உருவானது

    இந்த புயல் வங்காள விரிகுடாவில் அந்தமானுக்கு அருகே உருவானது. இந்த பெயர் ஓமன் நாட்டினரால் வழங்கப்பட்டது. இந்த புயலானது மேற்கு, வட மேற்காக நகர்ந்து, இந்தியாவின் கிழக்கு கடற்கரையைக் கடந்த ஒரு வெப்ப மண்டல புயலாகும். 2014 இல் வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான மிக பலம் வாய்ந்த புயலாகும்.

    டிட்லி புயல்

    டிட்லி புயல்

    அந்தமான் கடலில் உருவான டிட்லி புயல் அடுத்த 2 தினங்களில் வங்கக் கடலில் நுழைந்தது. இதையடுத்து தீவிர புயலாகவும் மாறியது. இந்த புயலால் ஆந்திராவில் பலாசாவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இந்த புயல் ஒடிஸாவில் 77 பேரை கொன்றது. வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் ஏராளமானோர் காணாமல் போயினர். அவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை.

    ஒடிஸாவில் ஃபனி

    ஒடிஸாவில் ஃபனி

    இந்த புயல் ஒடிஸாவில் மட்டும் ரூ 3000 கோடிக்கு சேதத்தை ஏற்படுத்தியது. மிகத் தீவிர புயலான ஃபனி கடந்த 2019ஆம் ஆண்டு வடக்கு இந்திய கடலில் உருவானது. இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் உருவான மிகத் தீவிர புயலாக உருவெடுத்தது. இந்த புயலால் ஒடிஸாவில் 35 பேர் பலியாகிவிட்டனர். இது ஒடிஸாவில் பெருந்சேதத்தை உருவாக்கியது.

    ஆம்பன்

    ஆம்பன்

    தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயலானது மிகத் தீவிர புயலாகும். இதுவரை வங்கக் கடலில் இது போன்ற ஒரு தீவிர புயலை கண்டதே இல்லை என்கிறார்கள் வானிலை நிபுணர்கள். இந்த புயல் நாளை கரையை கடக்கிறது. அப்போது ஒடிஸாவுக்கும் மேற்கு வங்கத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துமா என தெரியவில்லை. எனினும் இரு மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த புயல் மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் கடக்கிறது.

    English summary
    Here are the details of important cyclones that hit in Odisha. Starting from 1999 Odisha cyclone to Amphan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X