டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதிரிகளின் ரேடாரில் சிக்காது.. வச்சக்குறி தப்பாது.. சண்டைனு வந்துட்டா பின்வாங்காது.. இதுதான் ரஃபேல்!

Google Oneindia Tamil News

டெல்லி: எதிரிகளின் ரேடாரில் சிக்காது, நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கையும் துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டவை- இது மட்டுமல்லாமல் ஏராளமான சிறப்புகளை கொண்டது பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் விமானம்.

Recommended Video

    India’s Rafale Vs China’s J-20 Comparison In Tamil |Oneindia Tamil

    கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியா பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதில் முதல்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள் பிரான்ஸிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டது.

    அந்த விமானங்கள் இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு வந்தது. அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சமூகவலைதளங்களிலும் ரஃபேல் குறித்த பேச்சாகவே உள்ளன. அப்படி என்னதான் இருக்கிறது ரஃபேலில் பார்ப்போமா!

    பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?பாரிக்கர் அவர்களே! உங்கள் கனவு நனவாகியது.. ரஃபேல் விமானங்கள் வந்துவிட்டன.. வரவேற்க நீங்கள் எங்கே?

    வேகம்

    வேகம்

    போர் புரிய முக்கிய தேவை வேகம். அது ரஃபேலிடம் அதிகமாகவே காணப்படுகிறது. நடுத்தர பலதரப்பட்ட செயல்பாடுகளை கொண்ட போர் விமானமான ரஃபேல் அதன் வேகம், ஆயுதங்களை வைத்துக் கொள்ளும் திறன், குறிவைத்து தாக்கும் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. ரஃபேல் விமானத்தில் இரு என்ஜின்கள் உள்ளன.

    விமான என்ஜின்கள்

    விமான என்ஜின்கள்

    SNECMA M 88 என்பது தஸால்ட் ரஃபேல் போர் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் டர்போ பேன் என்ஜின்கள் ஆகும். இதை சப்ரான் ஏர்கிராப்ட் என்ஜின்கள் தயாரிக்கிறார்கள். இவைதான் விமானத்தின் வேகத்தை தீர்மானிக்கின்றன. இந்த இரு என்ஜின்களும்தான் மணிக்கு 1,912 கி.மீ. வேகத்தையும் 3,700 கி.மீ. தூரத்தையும் கொண்டு விமானம் பயணிக்க உதவுகிறது.

    கடினமான உறைவிடங்கள்

    கடினமான உறைவிடங்கள்

    2223 கி.மீ. வேகத்தில் செல்லும் போதும் 900 கிலோ எடை கொண்ட லேசர் குண்டுகளை வீசும் திறனுடையது. உள்புறத்தில் உள்ள பீரங்கி மூலம் ஒரு நிமிடத்திற்கு 2500 ரவுண்ட்கள் சுடும் திறன் கொண்டதாகும். வானிலிருந்து பூமியை தாக்கும் ஏவுகணையான ஹேமரும் இதில் உள்ளது. இதன் மூலம் பதுங்குகுழிகள், மிகவும் கடினமான உறைவிடங்கள், கிழக்கு லடாக் போன்று மலை பாங்கான பகுதிகளிலும் குறி வைத்து தாக்கும். ஜாம்மர்கள், கோல்டு என்ஜின் ஸ்டார்ட் வசதி, வானில் இருந்தே இன்னொரு விமானத்திற்கு எரிப்பொருளை நிரப்பும் வசதி உள்ளன. ஹெல்மெட் மவுன்டட் லைட், ரேடார் எச்சரிக்கை கருவிகள், பறப்பது தொடர்பான விவரங்களை 10 மணி நேரம் சேமிக்கும் வசதி கொண்டது.

    வார்ஃபேர் சிஸ்டம்

    வார்ஃபேர் சிஸ்டம்

    AESA ரேடார் (இது கணினி கட்டுப்பாட்டுடன் கூடிய ஆன்டெனா வாகும். இதில் ரேடியோ அலைகளின் கற்றை ஆன்டெனாவை நகர்த்தாமல் வெவ்வேறு திசைகளில் சுட்டிக் காட்ட மின்னணு முறையில் இயக்க முடியும்), ஸ்பெக்ட்ரா எலக்ட்ரானிக் வார்ஃபேர் சிஸ்டம் (ரேடியோ தொடர்புகளை துண்டிக்கும்), ஐஆர்எஸ்டி சிஸ்டம் (அகச்சிவப்பு கதிர்கள் மூலம் மறைந்திருக்கும் பொருட்களை கண்டறிந்து தாக்கும் ) ஆகியவை கொண்டுள்ள ரஃபேல் 4.5 தலைமுறை விமானமாகும். இதில் அகச்சிவப்பு ஏவுகணைகள், ரேடியோ அலைவரிசை, லேசர் கருவிகள் உள்ளன. இந்திய விமான படையில் 3 மற்றும் 4ஆவது தலைமுறை போர் விமானங்கள் மட்டுமே உள்ளன. தற்போது இந்தியாவிடம் சுகோய் 30எம்கேஐ, மிக் 29, மிராஜ் 2000 மற்றும் உள்நாட்டில் தயாரான தேஜாஸ் ஆகிய போர் விமானங்கள் உள்ளன.

    திறமை

    திறமை

    சுகோய் விமானங்களை விட மிகத் திறமையானவை ஆகும். இதன் மொத்த வெளிப்புறத்தில் உள்ள சுமை திறன் 9 டன்களை விட அதிகமாகும். இந்த ரஃபேல் விமானங்களால் இதே எடை கொண்ட காலி விமானத்தையும் சுமக்க முடியும். இதன் தூண்டுதல் திறன் சுகோயை விட 1.5 மடங்கு அதிகமாகும். ரஃபேலால் 24 மணி நேரத்தில் 5 தாக்குதல்களில் ஈடுபட முடியும். ஆனால் சுகோயால் வெறும் 3 தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட முடியும். ரபேலின் பராமரிப்பு நேரம் 2.25 மணி நேரங்கள் ஆகும். ஆனால் மற்ற விமானங்களின் பராமரிப்பு நேரம் 6 முதல் 8 மணி நேரமாகும். நிலையான இலக்கு மட்டும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் இலக்கையும் ரஃபேலால் துல்லியமாக குறி வைத்து தாக்க முடியும்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    ரபேல் விமானமும் பாகிஸ்தானின் எப்-16 பால்கான் ஜெட் விமானமும் கிட்டதட்ட ஒன்றுதான். ரபேல் விமானத்தால் 24.5 டன் எடையை சுமக்க முடியும். ஆனால் எப்- 16 விமானத்தால் 21.7 டன் எடை மட்டுமே சுமக்க முடியும். அதாவது ரஃபேலின் நிறைய ஆயுதங்களை வைக்க முடியும். எஃப் 16 ஜெட்களில் ரஃபேலை போன்று அணு ஆயுதங்கள் இல்லை. ஆனால் ரஃபேலால் அணு ஆயுதங்களை செலுத்தி எதிரிகளை வீழ்த்த முடியும். சுகோயுடன் ஒப்பிடும் போது எப் 16 ரக விமானங்களை சமாளிக்கும் ஒரு நிலை இந்திய விமான படைக்கு இந்த ரஃபேல் மூலம் வந்துவிட்டது என்றே கூறலாம்.

    பிரான்ஸ்

    பிரான்ஸ்

    கடந்த 13 ஆண்டுகளில் பலவிதமான சண்டைகளின் போது ரஃபேல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது. ஆப்கானிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளுடன் நடந்த பல்வேறு மோதல்களின் போது இந்த ரஃபேல் ரக விமானங்களையே பிரான்ஸ் விமான படை பயன்படுத்தியது. எதிரியின் உள்கட்டமைப்பையே துவம்சம் செய்யும் அளவுக்கு மாலியில் முக்கிய பங்காற்றியது ரஃபேல். பிரான்ஸால் நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் இந்த ரக விமானம் 9 மணி நேரம் 35 நிமிடங்கள் வானில் பறந்ததன் மூலம் அதன் திறன் தெள்ளத் தெளிவாகிறது.

    English summary
    Here are the features of Rafale jets. It Has capable of Nuclear attacks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X