டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுதந்திர இந்தியாவில் நூதுராம் கோட்சே முதல் நிர்பயா குற்றவாளிகள் வரை.. தூக்கிலிப்பட்டவர்களின் லிஸ்ட்!

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர இந்தியாவுக்கு பிறகு நாதுராம் கோட்சே முதல் நிர்பயா குற்றவாளிகளை வரை யாருக்கெல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டது? எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறித்த செய்தி தொகுப்பு இதுவாகும்.

கொலை, கொத்து கொத்தாக கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பயங்கரவாதம், தேசதுரோகம், போதை பொருட்கள் கடத்தல், போர் குற்றங்கள், விமான கடத்தல், மனித இனப்படுகொலை ஆகிய கொடூர குற்றங்களாக தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

அதன்படி சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், வங்கதேசம், நைஜீரியா, எதியோபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஈரான், ஜப்பான், தென் கொரியா, இலங்கை ஆகிய நாடுகள் தூக்கு தண்டனையை விதிக்கின்றன. ஏனைய நாடுகளான பிரேசில், சைல், கசகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்தியாவில்

இந்தியாவில்

அந்த வகையில் அகிம்சை பூமியான இந்தியாவில் கொடுங்குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இனி இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வழக்குகளை பார்ப்போம். சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனை கைதி நாதுராம் கோட்சே ஆவார். இவர் இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தேசப்பிதா காந்தியடிகளை சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவருக்கு 1949-ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவில்

இந்தியாவில்

அந்த வகையில் அகிம்சை பூமியான இந்தியாவில் கொடுங்குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இனி இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வழக்குகளை பார்ப்போம். சுதந்திர இந்தியாவின் முதல் மரண தண்டனை கைதி நாதுராம் கோட்சே ஆவார். இவர் இந்தியாவுக்கு சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தேசப்பிதா காந்தியடிகளை சுட்டுக் கொன்றார். இதையடுத்து அவருக்கு 1949-ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு வாரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 வட மாநில பில்லா ரங்கா

வட மாநில பில்லா ரங்கா

இதையடுத்து வடமாநிலங்களையே கதி கலங்கிய வைத்த பில்லா, ரங்கா. டெல்லியை சேர்ந்தவர் கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா. இருவரும் அக்காள்- தம்பியாவார்கள். கடந்த 1978 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் ஒரு விழாவுக்கு செல்வதற்காக வழியில் காத்திருந்த போது பில்லாவும் ரங்காவும் லிப்ட் கொடுப்பதாக காரி ஏற்றிக் கொண்டனர். பின்னர் அவர்களை வைத்து கடத்தல் நாடகம் ஆடி பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். ஆனால் அந்த குழந்தைகளின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி என தெரிந்தவுடன் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் தம்பியை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு அந்த பெண்ணை இருவரும் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பில்லாவும் ரங்காவும் 1982-ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

 கண்ணனூர் சைக்கோ

கண்ணனூர் சைக்கோ

கேரள மாநிலம் கண்ணனூரை சேர்ந்தவர் ரிப்பர் சந்திரன். இவருக்கு பூஜாப்புரா மத்திய சிறையில் 1991-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சைக்கோ கொலையாளியான இவர் இரவு நேரங்களில் வீடுகளுக்கு புகுந்து அங்கு இருப்போரை சுத்தியால் தலையில் ஓங்கி அடித்து கொல்வதுதான் இவரது குற்றம்.

 தமிழக குற்றவாளி ஆட்டோ சங்கர்

தமிழக குற்றவாளி ஆட்டோ சங்கர்

கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களை வைத்து விபசாரம், கள்ளச்சாராயம் உள்ளிட்ட விற்பனைகளை அரசியல்வாதிகள், போலீஸாரின் துணையுடன் மேற்கொண்டதாக கூறப்படும் ஆட்டோ சங்கர். 1980களுக்கு பிறகு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலைக்காக இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது 1988-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை ஒரு ஆண்டில் 6 பேரை கொன்று குவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த 1995ஆம் ஆண்டு சேலம் மத்திய சிறைச் சாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 தனஞ்செய் சட்டர்ஜி

தனஞ்செய் சட்டர்ஜி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தனஞ்செய் சட்டர்ஜி. இவர் 14 வயது சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் 2004 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். இவர் பிறந்த நாளன்றே தூக்கிலிடப்பட்டார். மேற்கு வங்கத்தில் 21வது நூற்றாண்டில் நடந்த முதல் தூக்கு தண்டனை இதுதான். இதற்கு முன்னர் அலிபோர் சிறையில் 1991ஆம் ஆண்டு நடைபெற்றது. திருச்சூரை சேர்ந்த தொடர் கொலை குற்றவாளி ரிப்பர் ஜெயனந்தன். இவருக்கு 2008-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கசாப்

கசாப்

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் அஜ்மல் கசாப். 2008-ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தாக்குதலில் பங்கெடுத்தவர். இந்த தாக்குதலில் 174 பேர் பலியாகிவிட்டனர். இவர் மீது இந்தியா மீது போர் தொடுத்தல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல் உள்ளிட்ட வழக்குகளை தொடர்ந்தது. வெடிகுண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிய போது இவர் ஒருவரே இந்திய போலீஸிடம் பிடிபட்டார். இதையடுத்து இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு மும்பை எர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

 காஷ்மீர் அப்சல் குரு

காஷ்மீர் அப்சல் குரு

காஷ்மீர் தீவிரவாதியான அப்சல் குரு, இவர் 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இதையடுத்து இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவரது தூக்கு தண்டனை ரத்து செய்வது தொடர்பான மனு இந்திய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இவர் 2013-ஆம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார். கடந்த 2015-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த யாகூப் அப்துல் ரசாக் மேனன் 1993-ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். இவரும் பிறந்த நாள் அன்றே தூக்கிலிடப்பட்டார்.

 4 பேருக்கு தூக்கு

4 பேருக்கு தூக்கு

2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவியை ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தொடர்பாக அக்ஷய் சர்மா, வினய் சர்மா, முகேஷ் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களது கருணை மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது இன்று காலை 5 மணிக்கு அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்திய மக்கள் எதிர்பார்த்தது இன்று நிறைவேறியது. நிர்பயாவின் ஆன்மா இன்றாவது சாந்தியடையட்டும்!

English summary
Here are the list of death sentence prisoners in India after Indian Independence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X