டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்திராயன் 2 விண்கலம் திடீரென நிறுத்தம்.. நடந்தது என்ன?.. கடைசி நிமிடத்தின் பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    டெல்லி: கிரையோஜெனிக் என்ஜினில் கோளாறு காரணமாக சந்திராயன் 2 விண்கலம் ஏவுவது நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    முதல்முறையாக நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டது. இதையடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவுவதற்காக கவுன்ட்டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.

    Here are the reasons for Why Chandrayaan 2 called off?

    ரூ 978 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் மார்க் 3 என்ற ஏவுகணை மூலம் ஏவப்பட இருந்தது. இதை காண்பதற்காக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலம் ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 வினாடிகள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென அதன் கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டது.

    சந்திராயன் 2 நிறுத்தப்பட்ட விவகாரம்.. இஸ்ரோவின் முடிவு மிகச்சரி.. டிஆர்டிஓ முன்னாள் இயக்குநர் சந்திராயன் 2 நிறுத்தப்பட்ட விவகாரம்.. இஸ்ரோவின் முடிவு மிகச்சரி.. டிஆர்டிஓ முன்னாள் இயக்குநர்

    கிரையோஜெனிக் எனப்படும் திரவு எரிபொருள் என்ஜின் கோளாறு காரணமாக சந்திராயன் 2 ஏவுகணை விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. கிரையோஜெனிக் எரிபொருளானது கவுன்ட்டவுன் முடிவில் எரியத் தொடங்கியதும் ஏவுகணை அதிக உந்தும் சக்தியுடன் விண்ணில் சீறி பாய்வதற்கு உதவுகிறது. இத்தகைய எரிபொருளை, ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நிரப்பியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    எனவே கோளாறுகள் சரி செய்யப்பட்டு அதனை ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    English summary
    New Delhi, July 15: India’s most ambitious space missionyet, Chandrayaan-2 was called off early this morning by the Indian Space Research Organisation (ISRO) after a technical snag was observed. The cryogenic rocket stage provides more thrust for every kilogram of propellant it burns.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X