டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான்கரை ஆண்டுகளில் இத்தனை சாதனைகளா? கெஜ்ரிவாலின் பர்ஃபாம்மன்ஸ் கார்டால் ஆதரவை அள்ளித் தந்த மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi Assembly Election Result | மாஸாக முன்னிலை வகிக்கும் ஆம் ஆத்மி..

    டெல்லி: பெண்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பெரும்பாலான வாக்குறுதிகளை கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றிவிட்டார். இதற்கான பரிசாக 2020 தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன.

    டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்து அதன் வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் தேர்தலுக்கு பிந்தைய , முந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பலத்தைத் தாண்டி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு காரணமாக ஆம் ஆத்மி கட்சி கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகளே என சொல்லப்படுகிறது.

    ஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்!!ஓவர் கான்பிடன்ஸ்.. வியூக நாயகன் அமித்ஷாவுக்கு என்னாச்சு.. தொடர் தோல்விகள்.. பொசுங்கும் பிளான்கள்!!

    ஷீலா தீட்சித்

    ஷீலா தீட்சித்

    கடந்த 2013-ஆம் ஆண்டு ஜன் லோக்பால் என்ற கொள்கையுடன் வந்த அரவிந்த் கெஜ்ரிவால், 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை தோற்கடித்தார். பின்னர் தொங்கு சட்டசபை ஏற்பட்டதால் 49 நாட்கள் மட்டுமே அவர் ஆட்சியில் இருந்தார். இதையடுத்து 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்றார் கெஜ்ரிவால்.

    தேர்தல் வாக்குறுதிகள்

    தேர்தல் வாக்குறுதிகள்

    அந்த ஆண்டு தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டார். கெஜ்ரிவால் முதல் வாக்குறுதி கல்வி. அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பேதமின்றி படிக்கும் அத்தனை குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கப்படும் என்றார். அதன்படி அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினார். 500 புதிய பள்ளிகள் கட்டப்படும் என அறிவித்தார். நில பற்றாக்குறை காரணமாக வெறும் 30 புதிய பள்ளிகளை அமைத்தார். ஆனால் ஏற்கெனவே உள்ள பள்ளிகளில் 8000 புதிய வகுப்பறைகளை கட்டிக் கொடுத்தார்.

    ஊக்கத் தொகை

    ஊக்கத் தொகை

    டெல்லி மாநில பட்ஜெட்டில் கல்விக்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்தார். 12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி, 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை அதிகரித்தார். தனியார் பள்ளிக் கட்டணத்தை முறைப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக கல்விக் கட்டணங்களை பெற்ற 575 பள்ளிகளை கட்டணத்தை திருப்பி தர உத்தரவிட்டார். பள்ளி சேர்க்கைகளில் மேனேஜ்மென்ட் கோட்டாவை நீக்கினார்.

    மருத்துவம்

    மருத்துவம்

    பள்ளி நிர்வாகக் குழுக்களை உருவக்கினார். அதன் மூலம் பெற்றோர்- ஆசிரியர் உறவை மேம்படுத்தினார். வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தினார். வகுப்பறையில் நடப்பதை பெற்றோர் வீட்டிலிருந்தே பார்க்கும்படி அவர்களுக்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து சுகாதாரத்தில் கவனம் செலுத்தினார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மருத்துவ ஆலோசனைகளை உறுதிப்படுத்தினார்.

    காற்று மாசு

    காற்று மாசு

    2017-ஆம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சி 41 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. அதன்படி இலவச அறுவை சிகிச்சைகளை நோயாளிகளுக்கு செய்யும் வண்ணம் ஒப்பந்தம் போடப்பட்டது. 204 மொகல்லா கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட்டது. இலவச மின்சாரம் திட்டத்தை அறிவித்தார். காற்று மாசை கட்டுப்படுத்த ஒற்றை இரட்டை வாகன இயக்க திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நகரம் முழுவதும் 35 லட்சம் மரங்களை நட்டார்.

    உயர்ந்த கெஜ்ரிவால்

    உயர்ந்த கெஜ்ரிவால்

    மூத்த குடிமக்கள், மாணவர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை தொடங்கிவைத்தார். இலவச குடிநீர் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். டெல்லியில் பொது இடங்களில் இலவச வைபை திட்டத்தை ஏற்படுத்தினார். பெண்கள் பாதுகாப்பில் கெஜ்ரிவால் கவனம் செலுத்தினார். இலவச மெட்ரோ ரயில் திட்டத்தை அவர் செயல்படுத்தினார். ஆரம்பத்தில் இலவசங்கள் என்றவுடன் அதை எதிர்க்கட்சிகளை போல் ஆம் ஆத்மி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மக்கள் நல இலவசங்களால் கெஜ்ரிவால் மக்கள் மனதில் உயர்ந்துவிட்டார்.

    English summary
    Delhi's AAP has given 70 promises in its assembly election 2015. Here are the works of Aravind Kejriwal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X