டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதித் துறை அமைச்சர் வரை.. அருண் ஜேட்லி கடந்து வந்த பாதை

Google Oneindia Tamil News

Recommended Video

    பழைய வழக்கங்களை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்த அருண் ஜெட்லி | Arun Jaitley Biography

    டெல்லி: உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முதல் நிதி அமைச்சர் வரை அருண் ஜேட்லி பல்வேறு பொறுப்புகளை வகித்த பெரும் திறமைசாலி.

    முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 1952-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகராஜ் கிஷன் ஜேட்லி, தாய் ரத்தன் பிரபா ஆவர்.

    இவர் டெல்லியில் 1957-ஆம் ஆண்டு முதல் 1969-ஆம் ஆண்டு வரை பயின்றார். பொருளியல் இளங்கலை பட்டத்தை 1973-ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் 1997-இல் சட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1982ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

    அதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி!அதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி!

    அடிப்படை உரிமைகள்

    அடிப்படை உரிமைகள்

    டெல்லி பல்கலைக்கழகத்தில் 1974-ஆம் ஆண்டு பாஜகவின் மாணவரணி தலைவரானார். 1975-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அச்சமயம் மக்களின் அடிப்படை உரிமைகள் நீக்கப்பட்டன. அருண் ஜேட்லி 19 மாதங்கள் தடுப்பு காவலில் இருந்தார். 1973-ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிராக ராஜ் நாராயண் மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் தொடங்கிய இயக்கத்தில் முக்கிய தலைவராக திகழ்ந்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர் ஜன சங்கத்தில் இணைந்தார்.

    உயர்நீதிமன்றம்

    உயர்நீதிமன்றம்

    இவர் டெல்லியில் 1957-ஆம் ஆண்டு முதல் 1969-ஆம் ஆண்டு வரை பயின்றார். பொருளியல் இளங்கலை பட்டத்தை 1973-ஆம் ஆண்டு பெற்றார். பின்னர் 1997-இல் சட்டப்படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் 1982ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும் சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

    கோகோ கோலா

    கோகோ கோலா

    பெப்சி மற்றும் கோகோ கோலா ஆகிய நிறுவனங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராக ஜேட்லி ஆனவுடன் 2002-ஆம் ஆண்டு ஜேட்லி பெப்சி நிறுவனத்துக்காக ஒரு வழக்கில் ஆஜராகி வாதாடினார். ஆனால் உச்சநீதிமன்றமோ இமயமலையில் மணாலி- ரோட்டாங் சாலையில் உள்ள பாறைகளில் பெயிண்ட் மூலம் விளம்பரப்படுத்தியதற்கு எச்சரிக்கை விடுத்ததோடு 8 நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்தது.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர்

    2004-ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கோகோ கோலா நிறுவனத்துக்காக ஆஜராகினார். கடந்த 2009-ஆம் ஆண்டு எல் கே அத்வானியால்அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட ஜேட்லி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் வக்கீல் பணியை நிறுத்திக் கொண்டார். 1991-ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரானார்.

    ஜேட்லிக்கு பொறுப்பு

    ஜேட்லிக்கு பொறுப்பு

    1999-ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலக வர்த்தக அமைப்பின் கீழ் முதலீடுகளின் கொள்கையை நடைமுறைப்படுத்த முதல்முறையாக ஒரு புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டு சட்டத் துறை மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த ராம் ஜேத்மலானி ராஜினாமா செய்தவுடன் அந்த பொறுப்பு ஜேட்லிக்கு வழங்கப்பட்டது.

    முக்கியத்துவம்

    முக்கியத்துவம்

    2002-ஆம் ஆண்டு பாஜக தேசிய செய்தித் தொடர்பாளரான ஜேட்லி வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரானார். பின்னர் 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றவுடன் பாஜகவின் தேசிய செயலாளரான ஜேட்லி, மீண்டும் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். 2009-ஆம் ஆண்டு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜேட்லி பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா மற்றும் ஜன் லோக்பால் மசோதா ஆகியவற்றை ஆதரித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மீண்டும் தேர்வு

    மீண்டும் தேர்வு

    கடந்த 2014-ஆம் ஆண்டு அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் அமரீந்தர் சிங்கிடம் தோற்றார். இதையடுத்து இவர் குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மார்ச் 2018-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு மீண்டும் தேர்வானார்.

    எய்ம்ஸ் மருத்துவமனை

    எய்ம்ஸ் மருத்துவமனை

    2014-ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சரானார். 2016-ஆம் ஆண்டு கருப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர இவர் தானாக முன்வந்து வருமான வரி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார். இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலை பாதிப்பால் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டாம் என கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். பிரதமர் மோடி அவரது வீட்டுக்கே சென்று பேசியும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

    சிபிஐ

    சிபிஐ

    ஐசிஐசிஐ- வீடியோகான் மோசடி வழக்கில் சிபிஐ மீது கடந்த ஜனவரியில் ஜேட்லி குற்றம்சாட்டினார். அப்போது நிதி மோசடியில் வீடியோகான் நிறுவனத்தை சேர்ந்த வேணுகோபால் டூட் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து பெறப்பட்ட கடன் தொகையின் ஒரு பகுதியை சந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகியோரின் நிறுவனங்களுக்கு செலுத்தினார். இதை கேட்ட ஜேட்லி மோசடி செய்தவர்களின் பெயர்களை வெளிப்படையாக சிபிஐ கூறுவது விசாரணைக்கு எந்த விதத்திலும் உதவாது என்றார். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடுகளில் அருண் ஜேட்லி தொடர்பு இருப்பதாக கடந்த 2015-இல் குற்றம்சாட்டப்பட்டது.

    ஜேட்லி

    ஜேட்லி

    கடந்த ஜனவரியில் அவருக்கு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு நியூயார்க்கில் சிகிச்சை பெற்றார். அந்த புற்றுநோய் கட்டி முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை அளிக்க அவசியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த 9-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இன்றைய தினம் அவரது இதயம் மற்றும் நுரையீரலை செயல்படவைப்பதற்கான கருவிகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி வந்து சேர்ந்துள்ளது.

    English summary
    Arun Jaitley is a senior advocate who was also a ex Finance Minister. Here is the biodata of him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X