டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதுக்கே பயந்தா எப்படி? திடீரென்று வைரலாகும் 2004 கருத்து கணிப்பு முடிவுகள்.. காரணம் இதுதான்!

2004ல் வந்த லோக்சபா தேர்தல் முடிவுகளும் அப்போது வந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்புகளும் பெரிய அளவில் மீண்டும் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்றிலிருந்து இன்று வரை கருத்து கணிப்பு சொல்வது என்ன ?

    டெல்லி: 2004ல் வந்த லோக்சபா தேர்தல் முடிவுகளும் அப்போது வந்த எக்ஸிட் போல் கருத்து கணிப்புகளும் பெரிய அளவில் மீண்டும் வைரலாகி உள்ளது. இது திடீரென்று இப்போது வைரலாக முக்கிய காரணம் இருக்கிறது.

    நேற்று லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. அதன்படி, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 303 இடங்கள் வரை சராசரியாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 115 இடங்களை வெல்லும். பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணி 36 இடங்களை வெல்லும். மற்ற மாநில கட்சிகள் 111 இடங்களை வெற்றிபெறும் இடங்களை வெல்லும் என்கிறார்கள்.

    எச்.ராஜாவா இல்லை கார்த்தியா?.. சிவகங்கையில் யாருக்கு வெற்றி?.. நியூஸ் எக்ஸ் ஷாக் சர்வே! எச்.ராஜாவா இல்லை கார்த்தியா?.. சிவகங்கையில் யாருக்கு வெற்றி?.. நியூஸ் எக்ஸ் ஷாக் சர்வே!

    வாஜ்பாய் ஆட்சி

    வாஜ்பாய் ஆட்சி

    2004ல் வாஜ்பாய் ஆட்சிக்கு பின் அத்வானியை முன்னிறுத்தி பாஜக தேர்தலை மீண்டும் சந்தித்தது. தேர்தலில் பாஜகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று கணிப்புகள் வெளியானது. பாஜகவும் ஒளிரும் இந்தியா என்று நிறைய விளம்பரங்களை செய்து பெரிய அளவில் ஹிட் அடித்தது.

    கணிப்புகள் என்ன சொன்னது

    கணிப்புகள் என்ன சொன்னது


    அதன்படி வெளியான கணிப்புகள் கூட, பாஜகவிற்கு ஆதரவாகவே வந்தது. 2004ல் வெளியான கணிப்புகளின் படி

    ஆஜ்தாக் - ஓஆர்ஜி மார்க் கணிப்பு: பாஜக கூட்டணி 248, காங்கிரஸ் கூட்டணி 190, மற்ற கட்சிகள் 105

    என்டிடிவி - ஏசிநிலசன் கணிப்பு: பாஜக கூட்டணி 250, காங்கிரஸ் கூட்டணி 190-205, மற்ற கட்சிகள் 120

    சஹாரா கணிப்பு: பாஜக கூட்டணி 278, காங்கிரஸ் கூட்டணி 181, மற்ற கட்சிகள் 92

    ஸ்டார் நியூஸ் - சி வோட்டர் - கணிப்பு: பாஜக கூட்டணி 275, காங்கிரஸ் கூட்டணி 186, மற்ற கட்சிகள் 98

    சி நியூஸ் கணிப்பு: பாஜக கூட்டணி 249, காங்கிரஸ் கூட்டணி 176, மற்ற கட்சிகள் 117

    ஆனால் முடிவுகள் என்ன

    ஆனால் முடிவுகள் என்ன

    ஆனால் வெளியான முடிவுகளின் படி பாஜக கூட்டணி 187 இடங்களை மட்டுமே வென்றது. காங்கிரஸ் கூட்டணி 219 இடங்களை வென்றது. மாறாக மற்ற கட்சிகள் 105 இடங்களை வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ் 10 வருடம் ஆட்சி புரிந்தது வரலாறு.

    மோசம்

    மோசம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாஜக கணிப்புகளை விட 70 இடங்கள் குறைவாகவே வாங்கியது. சராசரியாக பாஜக 260 இடங்கள் வரை வெல்லும் என்று கணித்து இருந்தார்கள். ஆனால் அது 187 இடங்களை மட்டுமே வென்றது. இது கருத்து கணிப்பு நடத்திய நிறுவனங்களை பெரிய அளவில் தலைகுனிய வைத்தது.

    அப்போதும் நடந்தது

    அப்போதும் நடந்தது

    அப்போதும் கூட பாஜகவிற்கு சாதகமான கருத்து கணிப்புகளால், பங்கு சந்தையில் புள்ளிகள் அதிகரித்தது. வரிசையாக நிறைய கோடிகள் பங்கு சந்தையில் புழங்கியது. ஆனால் கடைசியில் பாஜக படுதோல்வி அடைந்து 10 வருடம் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மீண்டும் ஒரு மாயம் நடக்காதா என்று காங்கிரஸ் கட்சி தற்போது காத்துக் கொண்டு இருக்கிறது.

    English summary
    Lok Sabha Exit Poll Results 2019: Here is the reason why 2004 exit polls are viral again.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X