டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் தோனியை நம்புகிறேன்.. தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் ஒலித்த பெயர்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் ஒலித்த தோனியின் பெயர்.. ஏன் தெரியுமா?- வீடியோ

    டெல்லி: தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனியின் பெயர் கூறப்பட்டது பெரிய வைரலாகி உள்ளது.

    நேற்று ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். புல்வாமா தாக்குதலை நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர்தான் மசூத் அசார்.

    இந்தியாவின் பல ஆண்டு கோரிக்கை ஆகும் இது. கடும் சர்ச்சைகளுக்கு பின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

    மசூத் அசாரின் தடைக்கு ஒப்புக்கொண்ட சீனா.. மனமாற்றத்திற்கு மோடி காரணமா? பின்னணி என்ன?மசூத் அசாரின் தடைக்கு ஒப்புக்கொண்ட சீனா.. மனமாற்றத்திற்கு மோடி காரணமா? பின்னணி என்ன?

    கடும் எதிர்ப்பு

    கடும் எதிர்ப்பு

    நேற்று மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் சீனா இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றாலும் சீனா மட்டும் எதிர் திசையில் இருந்தது.

    கடுமையான வாதம்

    கடுமையான வாதம்

    இதையடுத்து இந்தியா தரப்பில் ஐநாவில் கலந்து கொண்டு பேசிய பிரதிநிதி சையத் அக்பருதீன் சீனாவிடம் முக்கியமான கோரிக்கைகளை வைத்தார். அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, நான் தோனியின் ரசிகர். நான் அவரின் டெக்னிக்குகளை நம்புகிறேன். ஒரு விஷயம் முடிந்ததாக நாம் நினைக்கையில் அது முடியவில்லை என்று தோனி நிரூபித்து காட்டி இருக்கிறார். அப்படித்தான் இந்த விஷயமும். அதனால் எனக்கு இந்த பிரச்னையை வெற்றிகரமாக முடிப்போம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    டிவிஸ்ட்

    டிவிஸ்ட்

    நாங்கள் இதில் இன்னும் தோற்கவில்லை என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று குறிப்பிட்டு அவர் தனது உரையை முடித்தார். அதன்பின் வரிசையாக பல்வேறு நாட்டு உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதியாக ஆச்சர்யமாக சீனா, மசூத் அசாரை தீவிரவாதியாக அறிவிக்க ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலால் மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    தோனி எப்படி

    தோனி எப்படி

    பொதுவாக ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் சரி தோனி களத்தில் இருக்கும் வரை போட்டியின் போக்கை யாராலும் கணிக்க முடியாது. 19வது ஓவர் வரை ஆமை வேகத்தில் ஆடிவிட்டு கடைசி ஓவரில் சூறாவளியாக மாறி துவம்சம் செய்து வெற்றியை ருசிப்பதில் தோனி வல்லவர். இதைதான் இந்திய அதிகாரி நேற்று எடுத்துக்காட்டாக ஐநாவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Here is Why the CSK captain Dhoni's name quoted in UNSC against terrorist Masood Azhar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X