• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இங்க பாரப்பா.. லஞ்சம் மட்டும் வாங்காதே.. மோடியிடம் வாக்குறுதி வாங்கிய தாயார்!

|
  Modi Interview: ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்துள்ள பேட்டி- வீடியோ

  டெல்லி: தனது தாயார் ஹீராபென் மோடி மீது மோடி கொண்டுள்ள அன்பும், அபிமானமும் அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சி ஹீராபென் மோடியை கேலி செய்தபோது தனது தாய்ப்பாசத்தை அழகாக வெளிப்படுத்தினார் மோடி. மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது ரூபாய் வீழ்ச்சியை, மோடியின் தாயாருடன் ஒப்பிட்டு ராஜ் பாபர் பரிகாசம் செய்தபோது அதை கடுமையாக எதிர்த்தார் மோடி. ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்த இந்த பேட்டியில் அதுகுறித்து விளக்கியுள்ளார் மோடி

  மிகக் கடினமான சூழலில் தன்னையும் தனது சகோதர, சகோதரிகளையும் தனது தாயார் வாழ்த்தியதை எப்போதும் மறக்கவில்லை மோடி. தனது தாயாரை இதற்காகவே அவர் கொண்டாடி வருகிறார். மோடியின் தாயாரைப் பொறுத்தவரை பிரதமர் பதவியெல்லாம் முக்கியத்துவம் இல்லாதது. இதன் காரணமாக தனது மகனுக்கு கிடைத்துள்ள மரியாதை கூட அவருக்கு முக்கியமில்லை. காரணம், குஜராத் முதல்வராக இருந்தபோதே தனது மகன் எல்லாவற்றையும் சாதித்து விட்டதாக கருதுபவர் அவர்.

  Heres what Modis Mother Had To Say When He Was Elected The CM of Gujarat

  மோடி கூறுகிறார், "நான் பிரதமரானபோது எனது பெயர்தான் எங்கும் உச்சரிக்கப்பட்டது. எனது புகைப்படங்கள் நாடு முழுவதும் பார்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஒரு பரபரப்பான நிலை. எனது தாயார் இதை எப்படிப் பார்க்கிறார் என்று பலரும் என்னிடம் கேட்டனர். ஆனால் அவருக்கு இதை விட நான் முதல் முறையாக குஜராத் முதல்வரானதுதான் மிகப் பெரிய சாதனையாக தெரிந்தது.

  முதல் முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது மோடி டெல்லியில் இருந்தார். தகவல் அறிந்ததும் அவர் தனது தாயாரை சந்திக்க அகமதாபாத்துக்கு விரைந்தார். அந்த சமயத்தில் மோடி சற்றும் எதிர்பாராத ஒரு அறிவுரையை ஹீராபென் மோடிக்கு வழங்கினார். அது மோடிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

  இதுகுறித்து மோடி கூறுகையில், நான் டெல்லியில் இருந்தேன். முதல்வர் பதவியேற்புக்கு முன்னதாக எனது தாயாரை சந்திக்க விரும்பினேன். இதனால் அகமதாபாத் விரைந்தேன். அங்கு எனது சகோதரர் வீட்டில்தான் எனது தாயார் வசித்து வருகிறார். எனக்கு பதவி கிடைத்துள்ளது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் முதல்வர் பதவி என்பது தெரியாது. நான் சென்றபோது அங்கு திருவிழா சூழல் காணப்பட்டது.

  ஹீராபென் மகிழ்ச்சியுடன் இருந்தார். அதேசமயம், தனது மகன் எந்தவிதமான ஊழலிலும் ஈடுபடக் கூடாது என்று அவர் விரும்பினார்.

  இதுகுறித்து மோடி கூறுகையில், எனது தாயாரை நான் சந்தித்தேன். அப்போது அவர், இங்கே பாரப்பா, நீ என்ன செய்யப் போகிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால் லஞ்சம் வாங்க மாட்டேன், கனவில் கூட அந்த பாவத்தை செய்ய மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு என்றார். அந்த வார்த்தைகள் என்னை தாக்கின. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தனது வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிய ஒரு பெண், எந்த வசதியையும் அனுபவிக்காத ஒரு பெண், மிகப் பெரிய சந்தோஷம் தேடி வந்த நிலையிலும் கூட, லஞ்சம் வாங்காதே என்று கூறினார்.

  இதுதான் மோடியை ஒரு மாபெரும் தலைவராக, அப்பழுக்கற்ற தலைவராக செதுக்க உதவியது. நான் முதல்வரான பிறகும் எனது அடித்தளத்தை நான் மறக்கவில்லை. உறுதியாக இருந்தேன்".

  ஹியூமன்ஸ் ஆப் பாம்பேவுக்கு மோடி அளித்துள்ள நான்காவது பகுதி பேட்டி இது. தனது முதல் 3 பேட்டிகளில் தனது இளம் பிராயம் முதல் தான் முதிர்ச்சி அடைந்தது வரை விளக்கியிருந்தார் மோடி. கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து தான் பிரதமர் பதவிக்கு உயர்ந்தது குறித்து விளக்கியிருந்தார்.

  "நான் இப்போதுள்ள அனைத்துக்கும் ஆரம்பம்".. வாழ்க்கை பயணத்தை விவரிக்கும் மோடி

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Modi's adulation for his mother Heeraben Modi was well-documented when she was being mocked by Congress. Modi vehemently defended her when Raj Babbar compared the falling value of Indian rupee with the age of Modi's mother Heeraben during campaigning for the Madhya Pradesh elections. So it shouldn't come as a surprise that he further enumerates her virtues in the fourth instalment of his interview with Humans Of Bombay.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more