டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உளவுத்துறை தலைவர், உள்துறை செயலாளர்.. மொத்த உயர் அதிகாரிகளும் ராஜ்நாத்சிங் வீட்டில் அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று, டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இந்திய உளவு அமைப்பான 'ரா' தலைவர் ஏ.கே.தஷ்மானா, உளவுத்துறை கூடுதல் இயக்குநர், அரவிந்த் குமார், மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா & தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.

High level meeting at Rajnath Singh house

டெல்லியிலுள்ள ராஜ்நாத்சிங் வீட்டில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தீவிரவாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

காஷ்மீரில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து அப்போது ராஜ்நாத்சிங் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

மேலும், நிதி ஆக்ஷன் டாஸ்க் படை (FATF) அமைப்பிடம், பாகி்ஸ்தானின் தீவிரவாத தொடர்பு பற்றிய, தகவல்கள் அடங்கிய தகவல் குறிப்பை வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புதான், சர்வதேச நாடுகள் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் அமைப்பாகும்.

அடுத்த வாரம் பாரீசில் இந்த அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இந்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு இந்த வழியாக நெருக்கடி தர முடிவு செய்துள்ளது.

English summary
Delhi: RAW chief AK Dhasmana, Additional Director IB Arvind Kumar, Union Home Secretary Rajiv Gauba & NSA Ajit Doval arrive at Home Minister Rajnath Singh's residence for a high-level meeting. The meeting has begun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X