டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Corona Spike in India: அதிர வைக்கும் பரவல்.. வெறும் 24 மணி நேரத்தில் 6654 பேருக்கு பாசிட்டிவ்!

கடந்த 24 மணி நேரத்தில் 6654 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதிமான ஒரு நாள் ஸ்பைக்கை கொரோனா ரெக்கார்ட் வைத்துள்ளது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே நாளில் இந்தியாவுக்கே ஷாக் தந்துள்ளது கொரோனா.. இந்த 24 மணிநேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 6, 654 பேருக்கு பாஸிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.. 137 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த தகவலை மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4வது லாக்டவுன் அமலில் உள்ளது.. அதில் பல தளர்வுகளும் உள்ளன.. ஏற்கனவே லாக்டவுன் இருந்த நேரத்தில் இருந்ததை விடவும், இப்போது நிறைய கொரோனா கேஸ்கள் இந்தியாவில் அதிகரித்தபடி உள்ளன.

அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!

ஆறுதல் செய்தி

ஆறுதல் செய்தி

இதுவரைக்கும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஆவர்.. 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் சிகிச்சையில் உள்ளனர்.. இதில் கிட்டத்தட்ட 52 ஆயிரம் பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர் என்பது ஒரு ஆறுதலான செய்தியாக நமக்கு உள்ளது.

கிலி

கிலி

ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ 4 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.. இந்த சமயத்தில் மேலும் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. இது மக்களுக்கு கிலியை தந்து வருகிறது.. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லும்போது, "இந்த 2 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

நேற்று ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 69597-ஆக உயர்ந்துள்ளது... அதேபோல் உயிரிழப்பு எண்ணிக்கை 3720- ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகம்

தமிழகம்

அதேசமயம் உடல்நலம் பெற்றவர்களின் எண்ணிக்கை 12,583 ஆக உயர்ந்துள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14, 753 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128 ஆகவும் அதிகரித்துள்ளது. 3-வது இடமான குஜராத்தில் 13,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,880 பேர் குணமடைந்தனர்.

தகவல்கள்

தகவல்கள்

டெல்லியில் 12,319, ராஜஸ்தானில் 6,494, மத்திய பிரதேசத்தில் 6,170, உத்தரப்பிரதேசத்தில் 5,735, ஆந்திராவில் 2,709, தெலங்கானாவில் 1,761, கர்நாடகாவில் 1,743, கேரளாவில் 732, புதுச்சேரியில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

இந்த தொற்று எண்ணிக்கையானது நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...4வது முறை லாக்டவுன் போட்டும் இவ்வளவு பாதிப்பா என்ற விமர்சனங்களையும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.. அதற்கு மத்திய அரசோ, "இந்த லாக்டவுன் இல்லையென்றால், இந்நேரம் நம் நாட்டில் 2.10 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள், 36 முதல் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பதிலளித்துள்ளது.

கவலை

கவலை

எனினும் இந்த கொரோனா நாளுக்கு நாள் தன்னுடைய கொடூர முகத்தை காட்டி வருகிறது... கடந்த 24 மணி நேரத்தில் 6654 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, ஒரு நாள் ஸ்பைக்கை கொரோனாவைரஸ் ரெக்கார்ட் வைத்துள்ளது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தி வருகிறது.

English summary
highest ever spike of 6654 coronavirus cases in india in the last 24 hours
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X