டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் ஒவ்வொருநாளும் உச்சம்- 24 மணிநேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா- 418 பேர் மரணம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக 24 மணிநேரத்தில் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 418 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,27,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,84,972 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 51,75,415 குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் இருந்து வருகிறது.

நிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக் நிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக்

கொரோனா புதிய உச்சம்

கொரோனா புதிய உச்சம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் முதல் முறையாக மிகப் பெரும் எண்ணிக்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 24 மணிநேரத்தில் மொத்தம் 418 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 4,73,105

பாதிப்பு எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 4,73,105

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,73,105 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,71,697 ஆகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா பலி கொண்ட எண்ணிக்கை 14,894 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் மிக மோசமான பாதிப்பை எட்டியிருக்கிறது.

முதல் 2 இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி

முதல் 2 இடங்களில் மகாராஷ்டிரா, டெல்லி

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,900 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,739 ஆகும். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகம். டெல்லியில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70,390 ஆக உள்ளது. டெல்லியில் மட்டும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,365 ஆகும்.

தமிழகத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு

தமிழகத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு

டெல்லியைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6746 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 866 ஆகவும் அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 29,001 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 1736 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
418 deaths and highest single-day spike of 16,922 new Coronavirus positive cases reported in India in last 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X