டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடம்- ஒரே நாளில் 69,196 பேருக்கு தொற்று உறுதி

Google Oneindia Tamil News

டெல்லி: ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளிலேயே இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் புதன்கிழமையன்று மட்டும் 69,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Recommended Video

    China Corona Vaccine : டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் | Oneindia Tamil

    உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,25,56,293 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,88,834 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

    Highest singleday spike of 69,196 Positives in India on Wednesday

    உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 789,957 ஆக உள்ளது. புதன்கிழமையன்று மட்டும் இந்தியாவில் 69,196 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் 43,194 பேருக்கும் பிரேசிலில் 48,541 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,699,168; பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,460,413. இந்தியாவில் இது 2,835,822 ஆக உள்ளது.

    இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மருந்து அறிமுகம் .. டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவிகன் மருந்து அறிமுகம் .. டாக்டர் ரெட்டி நிறுவனம்

    அமெரிக்காவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,060,513; பிரேசிலில் 2,615,254; இந்தியாவில் 2,096,068 பேர் குணமடைந்தும் உள்ளனர். கொரோனா மரணங்களில் அமெரிக்காவில் 176,290 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 111,189 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 53,994 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

    English summary
    Highest singleday spike of 69,196 Coronavirus cases in India on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X