ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் போடும் பிளான்! சொந்த கட்சி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்! இமாச்சலில் பரபர
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து இமாச்சல பிரதேச சபாநாயகர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருந்த போதிலும், திடீர் குழப்பம் ஏற்பட்டது.

பெரும்பான்மை இருந்த போதிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் கடந்த வாரம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இது அம்மாநில காங்கிரஸுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையே நிலைமையைச் சமாளிக்க ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு மாற்றி வாக்களித்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இமாசல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும் முன்பு இவர்கள் 6 பேரும் பாஜக ஆளும் ஹரியானாவில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து நேரடியாக அவர்கள் சட்டசபைக்கு வந்து வாக்களித்தனர். அப்போது அவர்களின் துணிச்சலைப் பாராட்டுவதாகக் கூறி பாஜக எம்எல்ஏக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிந்தர் ராணா, சுதிர் ஷர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடூ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அம்மாநில சபாநாயகர் "காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளனர். இதையடுத்து அந்த 6 பேரும் உடனடியாக இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று அறிவித்தார்.
நேற்றைய தினம் தான் அவை விதிகளை மீறியதாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்த நிலையில், இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications