டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து: ப.சிதம்பரம் காட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    #StopHindiImposition அமித்ஷாவிற்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளிப்பு

    டெல்லி: இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்பது நச்சுக் கருத்து என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்துக்காக அவரது குடும்பத்தினர் இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

    Hindi alone can unite people is dangerous idea: Chidambaram

    தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.

    இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

    தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.

    வரும் 20-ந் தேதி திமுக நடத்தும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரியை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பெயரில் பதிவிடப்பட்டுள்ளது.

    English summary
    Former Union Minister P Chidambaram who jailed in Tihar tweets that, A dangerous idea that Hindi alone can unite the people of this country has been floated. The Tamil people, as well as all others who speak other languages, will never allow the imposition of Hindi"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X