டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லூரிகளில் இந்தி கட்டாயம்.. யூஜிசி வெளியிட்ட புதிய சுற்றக்கை- வீடியோ

    டெல்லி: கல்லூரிகளில் இளங்கலை பாடப் பிரிவுகளில் இந்தி கட்டாயம் என பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னதாக பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவியேற்ற பின்னர் புதிய கல்விக்கொள்கை கஸ்தூரி ரங்கன் குழு சமர்பித்தது.

    hindi Imposition in Undergraduate Programmes all university: UGC new order

    அந்த குழுகூன் பரிந்துரைப்படி 6ம் வகுப்பு முதல் 3வது மொழியாக இந்தி கட்டாயம் என அறிவித்தது மத்திய ரசு. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியல் கடும் எதிர்ர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

    இந்த நிலையில் பல்கலைக்கழக மானிய குழு மீண்டும் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரிளில் இளநிலை பட்டப்படிப்பில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை வகுப்புகளில் சேரும் மாணவ மாணவிகள் கட்டாயம் இந்தி கற்க வேண்டும் என்ற பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் தவறான செய்தி என்றும் யாரோ வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். எங்கள் பல்கலையில் இந்தி கட்டாயம் ஆக்கப்படவில்லை என மறுத்துள்ளது.

    இதனிடையே பட்டப்படிப்பில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்புகளை கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவலியுறுத்தி உள்ளது. இதேபோல் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    hindi compulsary in Bachelor's degree all university, UGC new order, but JNU Denies Hindi Imposition in Undergraduate Programmes
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X