• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருமா, சீமானை கைது பண்ணுங்க! சீனுக்குள் வந்த இமக அர்ஜுன் சம்பத்! பதாகைகளுடன் டெல்லியில் 10 பேர்!

Google Oneindia Tamil News

டெல்லி : பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலணாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், சில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிஎஃப்ஐ கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.

இந்நிலையில் அதற்கு அடுத்த நாள் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

பொய்ப்பிரசாரம் முறியடிப்பு.. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடக்கும்.. அர்ஜூன் சம்பத் உறுதிபொய்ப்பிரசாரம் முறியடிப்பு.. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியாக நடக்கும்.. அர்ஜூன் சம்பத் உறுதி

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா

இதனையடுத்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இதற்கு கண்டனர் தெரிவித்து வருகின்றனர். மத்திய பாஜக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

அர்ஜுன் சம்பத்

அர்ஜுன் சம்பத்

இந்நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருக்கிறார். இந்து மக்கள் கட்சி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரி அந்த அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சுமார்10 பேர் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமா, சீமான்

திருமா, சீமான்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திமுக எம்பி ஆ ராசா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை கைது செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத்," மத்திய அரசு இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்த பிறகும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அந்த இயக்கத்தை ஆதரித்து பேசி வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே யாசிக் மாளிகை தமிழகம் அழைத்து வந்து தனி தமிழ்நாடு கூறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.

ஆ.ராசா

ஆ.ராசா

திமுக எம்பி ஆன ஆ.ராசா ஒரு கிறிஸ்தவர், அவரது மனைவியும் கிறிஸ்தவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு ஒருதலைப் பட்சமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களை தடை செய்யும் நோக்கில் பூவுலகின் நண்பர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த விவகாரங்கள் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்" என பேசினார்.

English summary
Hindu makkal katchi leader Arjun Sampath has said that the vck leader Thol Thirumavalavan and Naam Tamilar katchi coordinator Seeman, who are speaking in support of the Popular Front of India, should be arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X