டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆச்சரியம், ஆனால் உண்மை.. ஆர்எஸ்எஸ்சை தேச துரோக இயக்கம் என்று தடை செய்த பட்டேலுக்கு பாஜக அரசு சிலை!

சர்தார் வல்லபாய் பட்டேல் 1948ல் இந்திய நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடைசெய்த படேலுக்கு சிலை வைத்த பாஜக!- வீடியோ

    டெல்லி: சர்தார் வல்லபாய் பட்டேல் 1948ல் இந்திய நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது.

    குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரிகளுக்கு எதிராக சர்தார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அரசு ஆவண விவரங்கள் வெளியாகி உள்ளது.

    தடை செய்தார்

    தடை செய்தார்

    இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த போதுதான் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்தார். மகாத்மா காந்தியின் படுகொலையை தொடர்ந்து 1948ல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்தார். இவர் தடை செய்வதாக அறிவித்த கடிதம் அப்போது பத்திரிகைகளில் கூட வெளியானது.

    சில வரிகள் எப்படி

    சில வரிகள் எப்படி

    இவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்த போது சில முக்கியமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். கலகம் மற்றும் வெறுப்பை உருவாக்கும் அமைப்பு ஆர்எஸ்எஸ். இந்தியா முழுக்க ஆர்எஸ்எஸ் அமைப்பு கலவரம் செய்ய பார்க்கிறது. இந்து மக்களை தவறான வழிக்கு கொண்டு சென்று எதிர்ப்பை உருவாக்க பார்க்கிறது. கொலை, கொள்ளை செய்வதை ஆர்எஸ்எஸ் ஊக்குவிக்கிறது என்று சர்தார் வல்லபாய் தனது அறிக்கையில் வெளியிட்டு இருந்தார்.

    என்ன சொன்னார் தெரியுமா

    என்ன சொன்னார் தெரியுமா

    இதை அவர் தனியாக சொல்லாமல் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர்களுக்கு கடிதம் மூலமும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த கோல்வாக்கருக்கு எழுதிய கடிதத்தில் 1948ல், ஆர்எஸ்எஸ் தேச துரோகம் செய்கிறது என்று கூறினார்.1948 ஜூலையில் இந்து மகாசாப தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், ஆர்எஸ்எஸ்தான் காந்தியை கொன்றது என்று சந்தேகம் இருக்கிறது என்றும் கூட அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இது தெரியுமா பாஸ்

    இது தெரியுமா பாஸ்

    இப்படியாக தனது வாழ்நாளில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்து, அதற்கு எதிராக குரல் கொடுத்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து வந்த பிரதமர் மோடி சிலை வைத்து இருக்கிறார் என்பது வரலாற்று வினோதம். பாஜக, சர்தார் வல்லபாய் பட்டேலை ஒரு வலதுசாரி தலைவராக முன்னிருத்த முயல்வது அதைவிட பெரிய வினோதம்.

    English summary
    Historical Irony: Once Sardar Patel banned RSS, Now Modi made a huge statue for him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X