டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம்.. களமிறங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா.. ஸ்ரீநகர் செல்ல திட்டம்!

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

காஷ்மீர் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அங்கு தொடர்ந்து குவிக்கப்பட்டு வரும் ராணுவம் பல்வேறு யுகங்களை உருவாக்கி உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 35000 வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தமாக புதிதாக 75000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

தடை

தடை

அதேபோல் அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது.காஷ்மீரில் 35ஏ சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு நீக்க வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

இதற்காகத்தான் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரை மத்திய அரசு பிரிக்க நினைக்கிறது என்றும் கூறப்படுகிறது.இதெல்லாம் இல்லாமல் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள பகுதிகளை இந்தியா திருப்பி எடுக்க போகிறது.

தாக்குதல் என்ன

தாக்குதல் என்ன

இதற்காக தாக்குதல் நடத்த உள்ளனர், என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அங்கு தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது, அதனால்தான் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர், என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

இப்படி காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. காஷ்மீரில் நேரடியாக சென்று நிலைமையை கண்காணிக்க அமித் ஷா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் காஷ்மீருக்கு சென்று ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Home Minister Amit Shah may hole meeting with the Indian army in Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X