டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் மாநில கிராம பஞ்சாயத்து தலைவர்களை டெல்லிக்கு அழைத்து அமித் ஷா நடத்திய முக்கிய ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு காஷ்மீர் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை- வீடியோ

    டெல்லி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அசோசியேசன் தலைவர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

    கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்துள்ளது.

    இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல் மாறியுள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம், மற்ற இந்தியர்கள் நிலம் வாங்கும் உரிமை, ஜம்மு காஷ்மீரில் கட்டாய கல்வி உரிமை சட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது.

    தமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே!தமிழிசை எந்த மாநிலத்துக்கு கவர்னராக போகிறார் என்பது கூட பிரேமலதாவுக்கு தெரியலையே!

    காஷ்மீர் கிராம தலைவர்கள்

    காஷ்மீர் கிராம தலைவர்கள்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அந்த மாநில பஞ்சாயத்து தலைவர்களை டெல்லிக்கு அழைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர் ஜிதேந்திர சிங், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், உள்துறை செயலாளர் பல்லா, கூடுதல் செயலாளர் கணேஷ் குமார் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஆலோசனை

    கிராமத்து தலைவர்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும், கிராம பஞ்சாயத்துக்களின் அதிகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    370 ரத்து குறித்து பேச்சு

    370 ரத்து குறித்து பேச்சு

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்கும் முன் ஜம்மு காஷ்மீர் மாநில பஞ்சாயத்து அசோசியேசன் தலைவர் அனில் சர்மா பேசுகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளோம். 370வது பிரிவை ரத்து குறித்து பேசுவதே நிகழ்ச்சியின் நிரல் என்றும், கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிகாரமளிப்பது குறித்து பேச உள்ளோம் என்றார்.

    மகிழ்ச்சியான தருணம்

    மகிழ்ச்சியான தருணம்

    இதேபோல் ஜம்மு பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து அசோசியேசன் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு இருப்பதற்காக நாங்கள் தெரிவிக்கிறோம். ஜம்மு இப்போது அமைதியாக காணப்படுகிறது. இது ஜம்முவின் நீண்டகால கோரிக்கை. எங்கள் பஞ்சாயத்துகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவர்களிடம் (அரசிடம்) சொல்ல நாங்கள் இங்கு வந்துள்ளோம். இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஜம்மு-காஷ்மீருக்கு மகிழ்ச்சியான தருணம்" என்றார்.

    English summary
    Home Minister Amit Shah, MoS Home Nityanand Rai, Union Minister Jitendra Singh, Home Secretary AK Bhalla, Additional Secretary Gyanesh Kumar, meet village heads from Jammu & Kashmir, at Ministry of Home Affairs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X