டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படி நடந்தது? உளவுத்துறையுடன் அமித் ஷா திடீர் ஆலோசனை.. அஜித் தோவலும் பங்கேற்பு.. காரணம் என்ன?

மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீர் என்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah Ajit Doval meet | அமித் ஷாவுடன் அஜித் தோவலும் திடீர் ஆலோசனை

    டெல்லி: மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திடீர் என்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

    இரண்டு வாரம் முன் காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் அதிகாரிகள் அவசர அவசரமாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர்.

    நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு! நிறைய பேர் அட்மிட் ஆகுறாங்க.. எதுவுமே புரியல.. ரஷ்யாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட பரபரப்பு!

    எப்படி

    எப்படி

    ஒரு பக்கம் சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்தி வருகிறது. இதற்காக சீனா தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரை சென்றுள்ளது. ஆனால் இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் எந்த விதமான முக்கியமான விஷயம் குறித்தும் முடிவு எடுக்கப்படவில்லை.

    காஷ்மீர்

    காஷ்மீர்

    அதே சமயம் காஷ்மீரில் என்ன தான் ராணுவம் குவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னும் அங்கு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அங்கு தொடர்ந்து ராணுவம் குவிக்கப்பட்டு வந்தாலும் மக்கள் இன்னும் ராணுவத்திற்கு எதிரான மனநிலையுடன்தான் இருக்கிறார்கள்.

    சிறிய அளவில்

    சிறிய அளவில்

    இந்த நிலையில்தான் நேற்று காஷ்மீரில் சிறிய அளவில் கலவரம் ஏற்பட்டது. நேற்று மாலை காஷ்மீரில் ராணுவத்தினர் மீது அங்கு இளைஞர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் நேற்று இரவு அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    என்ன ஆலோசனை

    என்ன ஆலோசனை

    இந்த நிலையில் தற்போது உள்துறை அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் மற்ற அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீரில் நடக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விதித்துள்ளார். அதேபோல் காஷ்மீரில் நேற்று நடந்த கலவரம் எப்படி நடந்தது என்றும் ரிப்போர்ட் கேட்டுள்ளார்.

    English summary
    Home Minister Amit Shah. NSA Ajit Doval, Home Secretary Rajiv Gauba and senior intelligence officials hold a meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X