டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புரேவி.. நாங்க இருக்கோம்.. கவலைப்படாதீங்க.. எடப்படியாருக்கு நம்பிக்கை ஊட்டிய அமித்ஷா!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: புரேவி புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தமிழக, கேரள மாநில முதல்வர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புயலை சமாளிக்க அனைத்து உதவியும் செய்யப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார்.

கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே அந்த புயல் கரையை கடக்க உள்ளது. தமிழக அரசு முன் எச்சரிக்கை பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. இலங்கையின் திரிகோண மலையில் உருவான புரேவி புயல் அங்கு ஒரு காட்டு காட்டி விட்டு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

Home Minister Amit Shah talks to Edappadi Palanisamy about the Purevi cyclone situation

கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே அந்த புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயலை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு முன் எச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கடலோரசபகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அபாயம் உள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளனர். இந்த நிலையில் புரெவி புயலை எதிர்கொள்ள அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தமிழகம் , கேரள முதல்வர்களிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்!விவசாயிகள் போராட்டத்தை சீக்கிரம் முடிங்க... அமித்ஷாவிடம் அமரிந்தர் சிங் வலியுறுத்தல்!

இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் கூறுகையில், புரெவி புயல் அச்சறுத்தல் உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகம் மற்றும் கேரள மக்களுக்கு எல்லா வகையிலும் உதவ மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை அவர்களிடம் தெரிவித்தேன். தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு மாநிலங்களிலும் பல இடங்களில் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர் என்று அமித்ஷா கூறினார்.

English summary
Union Home Minister Amit Shah spoke to the Chief Ministers of Tamil Nadu and Kerala and assured that all possible assistance would be provided to deal with the burevi storm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X