டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனால் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டினர்.. விசா காலத்தை மே 3 வரை நீட்டித்த உள்துறை

Google Oneindia Tamil News

டெல்லி: லாக்டவுனால் இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரின் விசா காலத்தை மே 3 வரை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

Recommended Video

    சீன சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதா?.. விசாரணையை தொடங்கும் அமெரிக்கா

    கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்துகளான விமான சேவை, ரயில், பேருந்து ஆகியவை இயங்கவில்லை. இதனால் பலர் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    Home Ministry extends visa of stranded foreigners till May 3

    அது போல் சுற்றுலாவுக்காகவும் பணி நிமித்தமாகவும் இந்தியா வந்த வெளிநாட்டினரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் அவர்களால் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியவில்லை.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடையாலும் போக்குவரத்து தடையாலும் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினரின் வழக்கமான விசா, ஈ விசா உள்ளிட்டவைகள் மே 3 நள்ளிரவு வரை எந்தவித கட்டணமும் இன்றி நீட்டிக்கப்படுகிறது.

    6 தியரி.. கொரோனா தோன்றியது எப்படி?.. சீனாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. நெருக்கும் உலக நாடுகள்! 6 தியரி.. கொரோனா தோன்றியது எப்படி?.. சீனாவுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.. நெருக்கும் உலக நாடுகள்!

    இதற்காக இணையதளத்தில் வெளிநாட்டினர் விண்ணப்பிக்க வேண்டும். பிப் 1 முதல் மே 3 வரை விசா முடிவடையும் வெளிநாட்டினர் கேட்டுக் கொண்டால் மே 17 வரை அதாவது 14 நாட்கள் வரை எந்தவித அபராதமும் இன்றி நீட்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Ministry of Home extended visas of foreigners who stranded in India due to lockdown till May 3.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X