• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

3 நாட்கள்.. வெறும் வயிற்றில் இந்த ஹோமியோபதி மருந்தை சாப்பிடுங்கள்.. கொரோனா வராது! அரசு தகவல்

Google Oneindia Tamil News
  Coronavirus Update|கொரோனா வைரஸினால் ஒரே நாளில் 25 பேர் பலி

  டெல்லி: கொரோனா வைரசை பார்த்து பயப்பட வேண்டாம், அதற்கான தடுப்பு வழிமுறைகள் இருக்கின்றன, மற்றும் மருத்துவ முறைகள் இருக்கின்றன என்று ஆயுஷ் அமைச்சகம் இன்று முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  ஹோமியோபதி மூலம் என்.சி.ஓ.வி (கொரோனா வைரஸ்) தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிக்க ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.

  இதன் பிறகு ஆயுஷ் அமைச்சகம் கொரோனா வைரஸ், தடுப்புமுறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவுரைகளில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பான மேலும் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதை பாருங்கள்:

  பொது பாதுகாப்பு

  பொது பாதுகாப்பு

  கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. எனவே தனிநபர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்றி வாழ வேண்டும். அடிக்கடி சோப் மற்றும் தண்ணீரை பயன்படுத்தி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். சுமார் 20 வினாடிகள் சோப் கையில் இருக்கும் வகையில் கைகழுவ வேண்டும். கழுவாத கைகளை கொண்டு, கண்களை தொடாதீர்கள். மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றையும் கழுவாத கைகளால் தொடாதீர்கள். நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருக்கமாக பழகாதீர்கள்.

  முகமூடி அவசியம்

  முகமூடி அவசியம்

  இருமல் அல்லது தும்மலின்போது துணியால் முகத்தை மூடிக் கொள்வது நல்லது. N95 முகமூடியை பயன்படுத்துவது, பயணம் மேற்கொள்ளும் போதும், பணி நேரத்தின்போதும் அல்லது பொது இடங்களுக்கு செல்லும் போதும் முகமூடியை பயன்படுத்தலாம். உங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அருகே உள்ள மருத்துவரை தொடர்புகொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரசுக்கு மருந்து

  கொரோனா வைரசுக்கு மருந்து

  ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும். ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொள்ள வேண்டும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சீனா பாதிப்பு

  சீனா பாதிப்பு

  இதனிடையே வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை சீனாவில் 132 தாண்டி உள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது லண்டன் பல்கலைக்கழக ஆய்வு குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வைரஸ் தாக்குதல் அதிகம் பரவக்கூடிய அபாயத்தில் உள்ள 30 நாடுகளில் இந்தியா இருபத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது எனவே நமது மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது அவசியமாகிறது.

  English summary
  The AYUSH ministry on Wednesday issued a health advisory and recommended that homeopathic and unani medicines could be effective in the prevention of novel coronavirus (nCoV) infections. The advisory was issued following a meeting on Tuesday of the scientific advisory board of the Central Council for Research in Homoeopathy (CCRH) under the Ministry of AYUSH to discuss ways and means for prevention of the nCoV infection through homoeopathy, the ministry said in a statement.It has recommended that homoeopathic medicine Arsenicum album 30 could be taken empty stomach daily for three days as a prophylactic medicine against the infection.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X