டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு.. சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Saravana Bhavan Rajagopal: சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி- வீடியோ

    டெல்லி: கொலை வழக்கில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

    தமிழக மக்களால் என்றுமே மறக்க முடியாத வழக்கு ஜீவஜோதி வழக்கு. அன்று சரவணபவன் ஓட்டலில் பிரின்ஸ் சாந்தகுமார் என்ற ஊழியர் வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவிதான் ஜீவஜோதி. சாந்தகுமார், கொடைக்கானல் மலையில் கொன்று புதைக்கப்பட்டதாக 2001-ல் புகார் வெடித்தது.

    ரூ.20 டோக்கன் தந்தவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம்.. மக்கள் ஏமாற மாட்டார்கள்.. கே.டி.ஆர் விமர்சனம்ரூ.20 டோக்கன் தந்தவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம்.. மக்கள் ஏமாற மாட்டார்கள்.. கே.டி.ஆர் விமர்சனம்

    ராஜகோபால்

    ராஜகோபால்

    சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று கொன்றது ராஜகோபால்தான் என்றும் சொல்லப்பட்டது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ராஜகோபால் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆயுள் தண்டனை

    ஆயுள் தண்டனை

    இதையடுத்து, ராஜகோபால் உள்பட 6 பேருக்கு கடந்த 2009-ல் சென்னை ஐகோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. பெயிலில் வெளியில் வந்த ராஜகோபால் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்தப் பெயிலைக் கேன்சல் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது தமிழக அரசு.

    அப்பீல் மனு

    அப்பீல் மனு

    இந்த மனுக்கள் மீதான விசாரணைதான் இன்று நடைபெற்றது. அப்போது, ராஜகோபால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளதுடன், சென்னை ஐகோர்ட்டின் தண்டனையையும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது.

    வலுவான சாட்சியங்கள்

    வலுவான சாட்சியங்கள்

    இந்த வழக்கில் சாட்சியங்கள் வலுவாக இருப்பதால் இந்த ஆயுள்தண்டனை உறுதி ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வருகிற ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சரணடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

    English summary
    Supreme Court has ordered, Life imprisonment for Saravana Bhavan hotel owner Rajagopal
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X