டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன? - வானிலை மையம் ரிப்போர்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் சில பகுதிகளில், மார்ச் முதல் மே மாதம் வரை பகல் நேரத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

மார்ச் முதல் மே வரையிலான கோடைகால கணிப்பிற்கு பிறகு இத்தகவலை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தென் மாநிலங்கள் அருகிலுள்ள மத்திய மாநிலங்களில் இந்தியாவிலும் வெப்பநிலை இயல்பை விடக் குறைவாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

 மத்திய இந்தியா

மத்திய இந்தியா

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்வரும் கோடைக் காலத்தில் (மார்ச் முதல் மே வரை), வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான துணைப்பிரிவுகளில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும். மத்திய இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து சில துணைப்பிரிவுகள் மற்றும் சில கடலோர துணைப்பிரிவுகளிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மார்ச் டூ மே

மார்ச் டூ மே

சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், கடலோர மகாராஷ்டிரா, கோவா மற்றும் கடலோர ஆந்திராவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. "பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., மேற்கு உ.பி., சத்தீஸ்கர், ஜார்கண்ட் முதல் ஒடிசா மாநிலங்களில் மார்ச் டூ மே வரை வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும்" என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐஎம்டி இயக்குநர் மிருதுஞ்சய் மோகபத்ரா கூறியுள்ளார்.

 0.86 டிகிரி செல்சியஸ் வரை

0.86 டிகிரி செல்சியஸ் வரை

குறிப்பாக, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் இயல்பான வெப்பநிலையை விட வெப்பம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு 75 சதவிகிதம் இருக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும், வெப்பநிலை முறையே 0.86 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.66 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

 தென் இந்தியா நிலைமை

தென் இந்தியா நிலைமை

ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் இயல்பான வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பம் வீச 60 சதவிகிதம் வாய்ப்புள்ளதாகவும் என்று அவர் கூறினார். எனினும், தென்னிந்தியாவின் சில பகுதிகள் இந்த சிக்கலில் தப்பிக்க வாய்ப்புள்ள. "தென் மாநிலங்கள் மற்றும் அதனுடன் இணைந்த மத்திய இந்தியாவின் பெரும்பாலான உட்பிரிவுகளில் இயல்பான கோடை பருவகாலத்தின் அதிகபட்ச வெப்பநிலை குறைவாக இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Hotter Than Usual Summer IMD reports - வானிலை ஆய்வு மையம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X