டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான்.. நாடே உச்சரிக்கும் ஒருவர்..யார் இந்த பினோத்? #Binod

Google Oneindia Tamil News

டெல்லி: டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என்று எந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான். எல்லோரும் மாற்றி மாற்றி பினோத் பினோத் என்று டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனாவிற்கு இடையே வட இந்தியாவே Binod என்ற ஒற்றை பெயரை வைத்து டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன நடந்தது? யார் இந்த Binod?

Recommended Video

    Binod Facts revealed | Oneindia Tamil

    இந்த பினோத் (Binod) டிரெண்ட் தொடங்கியது என்னவோ யூ டியூபில்தான். ஸ்லே பாயிண்ட்(Slayy Point) என்ற யூ டியூப் சேனல் ஒன்று வெளியிட்ட வீடியோவில் இவரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை வெளியிட்ட அபியுத்யா மற்றும் கவுதமி இருவரும், யூ டியூபில் எப்படி மக்கள் குப்பையான கமெண்ட்களை பதிவு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு, கலாய்த்து இருந்தனர்.

    இந்த வீடியோவிற்கு "Why Indian Comments Section is Garbage (BINOD)," என்று பெயர் வைத்து இருந்தனர். அதாவது யூ டியூப் வீடியோக்கள் கீழ் மக்கள் செய்யும் மொக்கையான கமெண்ட்களை தொகுத்து அதை கலாய்த்து இருந்தனர்.

    பெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது! பெங்களூர் கலவரம்.. சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு.. எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் கைது!

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    சரி இதற்கும் பினோத் (Binod) பெயருக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம்.. இந்த வீடியோவில் அவர்கள் இருவரும் பினோத் பெயரை குறிப்பிட்டு கலாய்த்து இருந்தனர் . பினோத் என்ற நபர்,யு டியூபில் இருக்கும் எல்லா வீடியோவிலும் சென்று வெறுமனே பினோத் என்று தனது பெயரை கமெண்ட் செய்து வந்துள்ளார். எந்த காரணமும் இல்லாமல், வெறுமனே தனது பெயரை அப்படியே கமெண்ட் செய்துவிட்டு வந்து இருக்கிறார் .

    வைரலானது

    வைரலானது

    இப்படி காரணமே இல்லாமல் எல்லா இடத்திலும் தனது பெயரை கமெண்ட் செய்த நபரை அந்த இரண்டு பேரும் வீடியோவில் கலாய்த்து இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து பினோத் (Binod) பெயரும் இணையத்தில் வைரலானது. அதன்பின் திரும்பிய எல்லா திசையிலும் பினோத் (Binod), பினோத் (Binod) என்று மட்டும்தான் எல்லோரும் எழுதினார்கள்.

    டிவிட்டர் டிரெண்ட்

    டிவிட்டர் டிரெண்ட்

    இதற்காக டிவிட்டரில் #Binod டிரெண்ட் உருவாக்கப்பட்டு, நிறைய காமெடிகள் , மீம்கள் வெளியானது . இதை வைத்து வரிசையாக பல பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களை செய்ய தொடங்கியது. பேடிஎம் நிறுவனம் தனது பெயரையே Binod என்று ஒரு நாள் மாற்றியது. டிண்டர் நிறுவனம் பினோத்திற்கு பினோதினி என்ற பெண் டிண்டரில் கிடைத்துவிட்டார் என்று விளம்பரம் செய்தது.

    செம டிவிடிக்கள்

    செம டிவிடிக்கள்

    ஏர்டெல் நிறுவனமும் ''நான் பினோத் பேசுகிறேன் '' என்றுதான் எல்லோரும் இப்போதெல்லாம் போனில் பேசுகிறார்கள் என்று கூறி விளம்பரம் செய்தது. அதேபோல் இன்னொரு பக்கம் உத்தர பிரதேச போலீஸ் பினோத் என்று விளம்பரம் செய்து, அதற்கு கீழ் மாஸ்க் அணியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தது. இந்த டிரெண்ட் தென்னிந்தியாவிற்கு வரவில்லை என்றாலும், இன்னும் வடஇந்தியாவில் டிரெண்டிங்கில்தான் இருக்கிறது.

    யார் இவர்

    யார் இவர்

    பினோத் என்பவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் யூ டியூப் சேனலில் எந்த வீடியோவும் இல்லை. எல்லா சேனலுக்கும் சென்று பினோத் என்று கமெண்ட் செய்வதை இவர் வழக்கமாக வைத்து உள்ளார். தமிழகத்தில் #PrayForNesamani எப்படி டிரெண்ட் ஆனதோ அதேபோல் இந்த பினோத்தும் இப்போது டிரெண்டாகி உள்ளது.

    English summary
    How a comment from Binod becomes bizarre trend in Social Media suddenly?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X