• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வாரத்தில் நான்கு நாள் வேலை.. ஐடி, வங்கி ஊழியர்களுக்கு எப்படி இருக்க போகிறது?

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா தொற்றுநோய் 2020 இல் தோன்றியதிலிருந்து உலகை பல வழிகளில் மாற்றியுள்ளது.மேலும் உலகெங்கிலும் உள்ள வேலை கலாச்சாரம் பெரும் தாக்கத்தை சந்தித்துள்ளது. முதலாளிகள் கொரோனாவை காரணம் காட்டி வேலைமுறையை மறுபரிசீலனை செய்து வருகின்றனர்.

வீட்டிலேயே வேலை செய்யும் முறையை தொடரும் வகையில் வேலை வடிவங்கள் மாறப்பட வாய்ப்புள்ளது. மேலும் வாரத்தில் நான்கு நாள் வேலை செய்யும் முறையும் அமலுக்கு வர வாய்பு உள்ளது.

இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உட்பட சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை உறுதி செய்ய ஏற்கனவே நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு.. பல கோடி கடன் பாக்கி.. ஆக்சன் எடுத்த தனியார் வங்கி.. நடந்தது என்ன? ஏலத்திற்கு வந்தது மதுவந்தி வீடு.. பல கோடி கடன் பாக்கி.. ஆக்சன் எடுத்த தனியார் வங்கி.. நடந்தது என்ன?

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டிஏசி, இந்தியாவில் தனது அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஏழு மாதம் முன்பே இந்த முறையால் உற்பத்தியை அதிகரித்துள்ளது. மும்பையில் அமைந்துள்ள நிறுவனம், 'தொழிலாளர்களை மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தித் திறனுடனும் ஆக்குவதற்காக' வெள்ளிக்கிழமையும் மூடுகிறது.

வேலை அளவீடு

வேலை அளவீடு

CNBC இன் அறிக்கையின்படி, தொழில்நுட்ப நிறுவனமான போல்ட் உலகளவில் இந்த புதிய மாடலுக்கு மாறிய புதிய நிறுவனங்களில் ஒன்றாகும். 4 நாள் வேலை முறைக்கு விரைவில் பல முதலாளிகள் தங்கள் நிறுவனங்களை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளதாம். பணியாளர்கள் அலுவலகத்தில் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை அளவிடுவதைத் தவிர்த்து, அவர்களால் எவ்வளவு வேலை நடந்துள்ளது. என்பதை அளவிடும் முறைக்கு மாறி வருகிறார்கள்.

மாறும் நிறுவனங்கள்

மாறும் நிறுவனங்கள்

பல ஐடி நிறுவனங்கள் வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் வீட்டிலிருந்தும், மற்றவற்றில் அலுவலகத்திலிருந்தும் வேலை செய்யக்கூடிய கலப்பின வேலை கலாச்சாரத்திற்கு மாறுவதையும் கருத்தில் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அல்லது டிசிஎஸ், 2025 ஆம் ஆண்டிற்கான 25 × 25 பார்வையை அறிவித்துள்ளது.

25 சதவீதம்

25 சதவீதம்

இந்தக் கொள்கையின் கீழ், உலகெங்கிலும் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் ஐந்து லட்சம் ஊழியர்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் அலுவலகங்களில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிலையிலும் 25 சதவிகித ஊழியர்களை அலுவலகத்தில் வேலை செய்ய வைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

செலவுகள் குறையும்

செலவுகள் குறையும்

ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் வாரத்தில் ஐந்து நாள் செயல்பட்டு வருகின்றன. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை விடுகின்றன. இந்நிலையில் நான்கு நாள் வேலை வாரமாக மாறினால், உற்பத்தி அதிகரிக்கும். செலவு குறையும் என்று நிறுவனங்கள் நம்புகின்றன. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையையும் பயன்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் செலவுகளை குறைக்கலாம் என்பதால் நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை மாற்றி வருகின்றன.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

இந்திய அரசாங்கமும் நாடு முழுவதும் இந்தக் கொள்கையை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் புதிய தொழிலாளர் குறியீடுகள், வாரத்திற்கு நான்கு வேலை நாட்களைக் குறைக்க நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு செயலாளர் அபூர்வ சந்திரா கடந்த பிப்ரவரி மாதம் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்

12 மணி நேரம் வேலை

12 மணி நேரம் வேலை

எவ்வாறாயினும், வாரத்திற்கு 48 மணிநேரமாக நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் என்பது கட்டாயம், அதற்கு மேல் இருக்கக்கூடாது என்று அந்த அதிகாரி கூறியிருந்தார். அதாவது, இந்தியாவில், பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தால், ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் 4 நாளில் 48 மணி நேரம் வேலை செய்துவிடுவார்கள். மற்ற மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம்

இதனிடையே இந்த ஹைப்ரிட் வேலை மாதிரி என்பது முதலாளிகள் தீவிரமாக பரிசீலிக்கும் மற்றொரு விருப்பமாகும். டிசிஎஸ் மட்டுமல்ல, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் இதை வழக்கமாக கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறார். ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் தனது ஊழியர்களுக்கு ஒரு கடிதத்தில், எதிர்காலத்தில் ஒரு கலப்பின வேலை மாதிரியைப் பின்பற்றும் என்று குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வாரமும் 60 சதவீத ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சில நாட்கள் கூடுவார்கள், மேலும் 20 சதவீதம் பேர் புதிய அலுவலக இடங்களில் வேலை செய்வார்கள், மீதமுள்ள 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்து வேலை பார்ப்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

சுழற்சி முறை பணி

சுழற்சி முறை பணி

இதனிடையே ஐடி ஊழியர்களுக்கு, உற்பத்தி நிறுவனங்களுக்கு வாரத்தில் நான்கு நாள் வேலை முறை செட் ஆகும் என்றாலும் ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், மருத்துவர்கள் உள்பட அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த முறை கடினமானது. அதே நேரம் வங்கி ஊழியர்களுக்கு இந்த முறை அமல்படுத்த மற்ற பணியாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டியது வரலாம். சுழற்சி முறை பணி வந்தால் வாரத்தில் ஒரு நாள் எல்லோருக்கும் விடுமுறை என்ற கான்செப்ட் உடையும் புது சூழலும் வரலாம்.

English summary
Google, TCS, Infosys are considering hybrid work model, Indian government is likely to implement new labour codes allowing 4-day work week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X