டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா?.. இது புதுசால்ல இருக்கு!.. யஷ்வந்த் சின்ஹா

Google Oneindia Tamil News

டெல்லி: ஓலா, ஊபரால் டிரக் விற்பனை பாதிக்கப்படுமா என பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையால் வாகன உற்பத்தி குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சில நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியை குறைத்து வருகின்றன.

அத்துடன் அசோக் லேலண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்து வருகின்றன. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.

சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு!சுபஸ்ரீ பலியான வழக்கு.. பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு வலைவீச்சு.. தனிப்படை அமைப்பு!

லட்சக்கணக்கானோர்

லட்சக்கணக்கானோர்

அப்போது வாகனங்களை வாங்க வேண்டும் என்பதை விட ஓலா, ஊபர் போன்றவைகளின் சேவைகளையே பயன்படுத்திவிடலாம் என லட்சக்கணக்கானோர் கருதுகின்றனர். இது போன்ற நபர்களின் மனப்போக்கே ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்க காரணம் என்றார். இதனால் சமூகவலைதளங்களில் டிரோல் செய்யப்பட்டார். இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்தார்.

நன்மதிப்பு

நன்மதிப்பு

அவர் கூறுகையில், அமைச்சர்கள் சிலர் வேடிக்கையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களின் இந்தக் கருத்துகள் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்லாது. இந்த கருத்துகள் மத்திய அரசு மீதான நன்மதிப்பை குறைத்துவிடும்.

பத்திரிகையாளர் சந்திப்பு

பத்திரிகையாளர் சந்திப்பு

ஓலா, ஊபர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் டிரக்குகளின் விற்பனை எவ்வாறு குறையும்? மேலும் துபாயை போல் இந்தியாவிலும் ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

வாராக்கடன்கள்

வாராக்கடன்கள்

நமது பொருளாதாரமும் யூஏஇ எனப்படும் ஐக்கிய அமீரகத்தின் பொருளாதாரமும் வித்தியாசமானவை. இந்தியாவில் விவசாயிகள் முன்னேறினால் மட்டுமே பொருளாதாரம் வளர்ச்சி அடையும். வங்கிகளை இணைப்பதால் மட்டுமே வாராக்கடன்கள் குறைந்துவிடாது என்றார் யஷ்வந்த் சின்ஹா.

English summary
EX Finance Minister Yashwant Sinha asks that how could Ola and Uber affected automobile sector because of not nuying trucks?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X