டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவின் முக்கிய அறிகுறியான "ஸ்மெல் லாஸ்" ஏன்?.. ஆய்வுகளின் விளக்கம் இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா நோயாளிகளின் வாசனை சுரப்பிகளை வைரஸ்கள் எப்படி சேதப்படுத்துகின்றன என்பது குறித்த ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா என்றாலே காய்ச்சல், சளி, மூச்சிரைப்பு, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றன. ஆனால் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவை மொட்டுகளும், வாசனை சுரப்பிகளும் இல்லாமல் போகும் என பிரிட்டன் ஆய்வுகள் கூறுகின்றன.

நாம் உணவை உண்ணும் போது அதன் வாசனையும் சுவையையும் ஒரு சேர உணர்கிறோம். எனவே இவற்றை தனித்தனியே பிரிப்பது என்பது கடினமாகும். மருத்துவர்களை பொருத்தமட்டில் சுவை என்பது நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் மூலம் மட்டும் அல்லாது வாயின் இதர பகுதிகளிலும் தொண்டையின் மேற்பகுதியிலும் தெரியும் என்கிறார்கள்.

100 நோயாளிகளுக்கு

100 நோயாளிகளுக்கு

நம் வாயில் உணவை போடும் போது அதன் வாசனையை மூக்கின் மூலம் உணருகிறோம். இதுதான் ரிவர்ஸ் இன்ஹேலேஷன் ஆகும். மூக்கால் சுவாசிக்கும் போது வாசனை சுரப்பிகளின் மூலம் உணவின் வாசனை நமக்கு தெரியவருகிறது. எனது மருத்துவமனையில் 100 நோயாளிகளுக்காவது இந்த வாசனை, சுவை தெரிவது குறைபாடு ஏற்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர் கூறியுள்ளார்.

ஆய்வுகள்

ஆய்வுகள்

பொதுவாக ஒரு மனிதனுக்கு எப்போது நுகரும் தன்மை இழப்பர்? நமது சுவாச குழாயில் ஏதேனும் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால்தான். அதாவது சளி பிடித்தால் வாசனை தெரியாது. சளி பிடிக்கும் போது மக்களின் மூக்கு அடைத்துக் கொள்கிறது. அதனால் வாசனைக் காற்றானது மூக்கின் உச்சியை அடையும் வேகம் குறைகிறது. அது 4 பேரில் ஒருவருக்காவது வைரஸ் காய்ச்சலுக்கு பின்னர் வாசனை திறன் இல்லாமல் போவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

திரும்ப வரவே வராது

திரும்ப வரவே வராது

அதாவது 11 முதல் 12 சதவீதம் வரையிலானோருக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி உள்ளிட்ட வழக்கமான அறிகுறிகள், நுகரும் தன்மை ஆகியவை இல்லாமல் போகும். பின்னர் சிகிச்சைக்கு பிறகு காய்ச்சல் குறைந்து மூக்கடைப்பும் குறைந்துவிடும். ஆனால் நுகரும் தன்மை மட்டும் அவர்களுக்கு திரும்ப வரவே வராது.

பாதிப்பு

பாதிப்பு

இது ஏன் என்பது குறித்து மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களை நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்ததில் மூக்கில் உள்ள வாசனைகளை ஏற்கும் சுரப்பிகள்/செல்கள், வைரஸ்களால் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. சளியால் மூக்கின் முனைகளில் உள்ள முடிகள் விழுந்துவிடும். இதனால் மூக்கில் உள்ள செல்களால் எந்த வாசனையையும் நுகர முடியவில்லை. வாசனை சுரப்பிரளை விட வாசனை சுரப்பிகளை சுற்றியுள்ள செல்களை வைரஸ் நேரடியாக பாதிக்கிறது.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

இதனால் வாசனை சுரப்பிகளை விட மூக்கில் உள்ள சிறிய திசுக்கிளில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால்தான் வாசனை சுரப்பி இழப்பை கொண்ட கோவிட் 19 பாதித்த நோயாளிகள் பலருக்கு மீண்டும் வாசனை சுரப்பிகள் மீண்டும் வருவதற்கு காரணம், குறிப்பாக அவர்களது வாசனை செல்கள் பாதிக்கப்படவில்லை என்பதுதான்.

வைரஸ்

வைரஸ்

சில நபர்களில் கொரோனா வைரஸ் நரம்பு திசுக்களை ஆக்கிரமித்து மூளையின் உள்கட்டமைப்பில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். நுரையீரலை விட சுவாசத்தை கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதி வைரஸால் பாதிக்கப்படுவதால் செயற்கை சுவாசக் கருவிகள் வைத்தாலும் சிலரின் நிலை மோசமாகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.

English summary
Here are the process of how smell receptors could be damaged by the virus?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X