டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1200 குண்டுகளை அசராமல் போடும் அப்பாச்சி.. 293 கி.மீ. வேகம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவின் நவீன போர்விமானமான அப்பாச்சியை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் அது எவ்வாறு பணியாற்றுகிறது என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.

பாதுகாப்புத் துறையில் ரூ 21 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நவீன ராணுவ விமானங்களான அப்பாச்சி, ரோமியோ ரக விமானங்களும் அடங்கும்.

இந்த நவீன தொழில்நுட்பங்களை கொண்டது. போர் வரலாற்றில் புரட்சிக்கரமான வளர்ச்சியாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் கருதப்படுகிறது. இந்த பறக்கும் பீரங்கியை போன்றது என்பதால் எத்தனை கடினமான தாக்குதல்களையும் எதிர்கொள்ளும். எதிரி நாட்டு ஹெலிகாப்டர்களுக்கு பெரும் சேதத்தை உண்டாக்கும். இரவாக இருந்தாலும் சரி பகலாக இருந்தாலும் சரி இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக அடையும்.

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர்

எத்தனை மோசமான வானிலையாக இருந்தாலும் இந்த ஹெலிகாப்டரை இயக்கலாம். இந்த ஹெலிகாப்டர்களை கண்டாலே தரையில் இருக்கும் எதிரி நாட்டின் ராணுவ படையினர் அஞ்சுவர். அந்தளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படும். இந்த ஹெலிகாப்டரில் 4 பிளேடுகள், இரு என்ஜின்கள் இருக்கும். இதை தயாரித்து போயிங் நிறுவனம் ஆகும்.

இருவர் அமரலாம்

இருவர் அமரலாம்

தரையிறங்கும் சக்கரங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கி ஹெல்பையர் ஏவுகணைகளை செலுத்த 4 கருவிகள் உள்ளன. இந்த ஹெலிகாப்டரில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். இதை இயக்க இரு ஆண்டுகள் கடும் பயிற்சி தேவை. மணிக்கு 293 கி.மீ. வேகத்தில் செல்லும். 1200 குண்டுகளை தொடர்ந்து வீசக் கூடிய வலிமை பெற்றது.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

எதிரி விமானத்தின் பைலட்டையும் அவருடன் ஆயுதங்களை இயக்குபவர்களையும் குறி பார்த்து சுடுவதற்கு தேவையான டெலஸ்கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிளேடும் 6 மீட்டர் நீளமானவை. இந்த ஹெலிகாப்டரை பைலட் எந்த திசையிலும் திருப்பலாம். இது ஒவ்வொன்றும் 1700 எச்பி கொண்ட என்ஜின்களை கொண்டது. ஒவ்வொரு பிளேடும் டைட்டானியம் பொருளால் ஆனது. மரங்களில் மோதினாலும் சிறிய விபத்து ஏற்பட்டாலும் ஹெலிகாப்டருக்கு சேதம் ஏற்படாததற்கு டைட்டானியம் பயன்படுத்தப்படுகிறது.

ராக்கெட்

ராக்கெட்

வழக்கமாக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இரு ஹைட்ரா ராக்கெட்டுகளுடன் பறக்கும். ஒவ்வொரு ராக்கெட்டும் 2.75 இன்ச் கொண்ட ஏரியல் ராக்கெட்டுகளை கொண்டிருக்கும். அப்பாச்சியில் உள்ள துப்பாக்கி மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை சுடலாம். லாஞ்சரை விட்டு வெளியேறியதும் ராக்கெட்டை உறுதிப்படுத்த விமான துடுப்புகள் திறக்கப்படுகின்றன.

போயிங்

போயிங்

இந்த ஹெலிகாப்டர்களை கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், சிங்கப்பூர், சவுதி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் முதன் முதலில் 1970களில் ஹூகீஸ் ஹெலிகாப்டர்களால் உருவாக்கப்பட்டது. 1984 இல் ஹூகீஸ் ஹெலிகாப்டர்களை மெக் டொன்னல் டக்ளஸ் வாங்கினார். பின்னர் 1997-ஆம் ஆண்டு அந்த நிறுவத்தை போயிங்குடன் டக்ளஸ் இணைத்தார்.

English summary
An apache helicopter is a revolutionary development in the war. Let's see how it works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X