டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எபோலா, சிகாவை போல் கொரோனாவும் உடலுறவின் மூலமும் பரவுமா?.. கோவிட் 19 உடலில் நுழைவது எப்படி?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் எப்படியெல்லாம் உடலுக்குள் செல்கிறது, எபோலா, சிகா வைரஸை போல் உடலுறவின் மூலம் இந்த நோய் பரவுமா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஒரு பெரிய விவாதத்தையே நடத்தி வருகிறார்கள்.

Recommended Video

    உடலுறவு, மலம், கண்ணீர் மூலம் கொரோனா பரவுமா ?

    ஒரு கொரோனா வைரஸ் எப்படி உடலுக்குள் செல்கிறது என்பது குறித்து இன்னும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இந்த புதிய வைரஸ் உடலுறவின் போது பரவும் வைரஸாக இருக்குமே என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    அண்மையில் உலகையே உலுக்கிய எபோலா, சிகா ஆகிய வைரஸ்கள் உடலுறவின் போது பரவியதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எபோலா, சிகா வைரஸ் வந்த ஒரு நோயாளி குணமடைந்த பல மாதங்களுக்கு பிறகும் அவரது விந்தணுக்களில் அந்த வைரஸால் உயிர் வாழ முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    சுவடுகள்

    சுவடுகள்

    அது போல் வுகானில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிட் 19 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவர்களின் விந்தணுக்களில் அந்த வைரஸ் இருப்பதற்கான சுவடுகள் ஏதும் காணப்படவில்லை. 31 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட 34 பேருக்கு இந்த விந்தணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதித்த நாள் முதல் ஒரு மாதம் வரை நடந்த ஆய்வில் அவர்களது விந்தணுவில் கொரோனா வைரஸ் இல்லை.

    விந்து

    விந்து

    மிகவும் குறைந்த அளவில் நடத்தப்பட்ட இந்த சோதனை விந்துவில் Sars- Cov-2 வைரஸ் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மற்றபடி அவர்களின் உமிழ்நீர், வியர்வை மூலம் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்தில் கொள்ளப்படவில்லை. கோவிட் 19 கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விந்தணுக்களில் இந்த வைரஸ் இல்லை என்பதை மறுக்க முடியாது. வைரஸ் கடுமையாக பாதித்த நபரின் விந்துவில் இந்த வைரஸ் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் ஆய்வில் கூறப்படுகிறது.

    புரதங்கள்

    புரதங்கள்

    ஆணின் இனப்பெறுக்க உறுப்பில் இந்த வைரஸ் எத்தனை நாட்களுக்கு தங்கியிருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம், TMPRSS2 ஆகிய இரு புரங்கள்தான் கொரோனா வைரஸ் உடலில் நுழைய என்ட்ரி பாயிண்டாக உள்ளது. இந்த புரதங்கள் அதிகமாக உள்ள வெளிப்புற உடல் உறுப்புகள் மூலம் கொரோனா உள்ளே நுழைகிறது.

    கொரோனா

    கொரோனா

    ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம் என்பது ரத்த கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இதயத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட சீராக இயங்குவதற்கு உதவுகின்றன. இவை சிறுநீரகம், இதயம், நுரையீரல், தமனிகள் உள்ளிட்டவற்றின் வெளிப்புறத்தில் காணப்படும். இந்த என்சைமை குறி வைத்து தாக்கும் கொரோனா நேரடியாக உடலினுள் நுழைகின்றன.

    சிறுக்குடல்

    சிறுக்குடல்

    அது போல் TMPRSS2 என்பது ஆண்களின் விரைப்பையில் காணப்படும் ஒரு புரதமாகும். விந்துவை சுரக்கும் புரோஸ்டேட் சுரப்பிகளில் இது காணப்படுகிறது. சிறுநீர்ப் பைக்கு கீழே காணப்படுகிறது. இந்த இரு புரதங்களும் மனித கண்களில் கார்னியா செல்களில் அதிகம் காணப்படுகிறது. எனவே கண்கள், கண்ணீர் வழியே கொரோனா பரவ வழியை உருவாக்கிக் கொடுக்கிறது. மூக்கு மற்றும் நுரையீரலுடன் வாய்க்கு நேரடி தொடர்பிருப்பதால் அதன் மூலமும் கொரோனா பரவும். அதுபோல் உணவுக் குழாய், சிறு குடல், பெருங்குடல் ஆகியவற்றிலும் காணப்படுகிறது.

    சுவாச பாதை

    சுவாச பாதை

    மூக்கில் உள்ள Goblet மற்றும் Ciliated ஆகிய செல்கள் மூலம் கொரோனா வைரஸ் அதிகம் பரவும். Goblet என்பது சுவாசப் பாதை மற்றும் சிறு, பெருங்குடல்களில் காணப்படுகிறது. தூண் போன்ற அமைப்பை கொண்ட இந்த செல்லின் முக்கிய பணி சளியை சுரந்து குடல்களின் மேற்பரப்பை பாதுகாப்பது ஆகும். அது போல் Ciliated செல்களும் சுவாசப் பாதையில் காணப்படுகிறது. சிறிய முடிகள் போன்று தோற்றமளிக்கும் இந்த செல்கள் எளிதாக சுவாசிப்பதற்காக சுவாச பாதையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

    செல்கள்

    செல்கள்

    மல வாய்வழியாக பரவுதலுக்கு சாத்தியக்கூறு இருப்பதாகவும் அந்த வைரஸ் மலத்தில் 11 நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்றும் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு புரதங்கள் மூலம் உள்ளே வரும் கொரோனா வைரஸ் உடலில் உள்ள செல்களுக்கு செல்ல TMPRSS 2 உதவுகிறது. ஆஞ்சியோடென்சின் கன்வெர்டிங் என்சைம், கொரோனா வைரஸ் மனித உடலில் செல்ல உதவுகிறது.

    English summary
    How does Coronavirus enters into our body? Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X