டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வடமாநிலங்களில் அழிந்து வரும் தாய்மொழிகள்.. ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் இந்தி

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் மராத்தி, குஜராத்தில் குஜராத்தி, ஒடிசாவில் ஒடியா, பீகாரில் போஜ்பூரி, மேற்குவங்கத்தில் வங்காளம். பஞ்சாபில் பஞ்சாபி இப்படி ஒவ்வொரு மாநிலமும் தனக்கு என மொழி வைத்து உள்ளது. ஆனால் இந்த அத்தனை மொழிகளிலும் இன்று சரளமாக பேசப்படும் மொழி இந்தி. இந்த மாநிலங்களில் உள்ள மக்கள் மெல்ல மெல்ல தங்கள் தாய்மொழியில் பேசுவதை மறந்ததால் அந்த மொழிகள் அழிந்து வருகின்றன.

தமிழ்நாட்டை போல் பிற மாநிலங்களில் ஆங்கிலம் தெரியும் நம்பி சென்றுவிட முடியாது. குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு சென்றால் நிச்சயம் இந்தி தெரியாவிட்டால் ரொம்பவே வேதனைப்படுவீர்கள்

தமிழ்நாட்டில் தமிழ் தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால், யார் வேண்டுமானாலும் இங்கு எளிதாக வாழ முடியும் ஏனெனில் குக்கிராமங்களில் கூட ஆங்கிலத்தை சரளமாக பேச தெரிந்தவரகள் மற்றும் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் ஏராளம்.

பார்ரா.. இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா.. மெக்காலேவை இதற்காகவே பாராட்டலாம்! பார்ரா.. இதுல இப்படி ஒரு மேட்டர் இருக்கா.. மெக்காலேவை இதற்காகவே பாராட்டலாம்!

வட மாநிலங்களில்

வட மாநிலங்களில்

ஆனால் ஆங்கிலம் தான் நமக்கு சிறப்பாக தெரியுமே என்று எண்ணி வட மாநிலங்களுக்கு நீங்கள் சென்றால் நிச்சயம் மிகவும் கஷ்டப்படுவீர்கள். ஏனெனில் நம்மை போல் ஆங்கிலத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள் அல்ல அவர்கள். ஆனால் இந்தியின் மீது அதிக பற்று உடையவர்கள்.

ஆங்கிலம் அவசியம் இல்லை

ஆங்கிலம் அவசியம் இல்லை

வட மாநிலங்களில் இந்தி தெரிந்தால் தான் உங்களால் மற்றவர்களிடம் பேச முடியும். ஏனெனில் மும்மொழிகளை ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்களுக்கு இந்தியில் ஆர்வம் அதிகம். ஏனெனில் அவர்கள் சுற்றியுள்ள அத்தனை மாநிலங்களிலும், ஏன் அத்தனை பேருக்கும் இந்தி தெரியும் என்பதால் ஆங்கிலத்தை பெரிதாக கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் ஆங்கிலத்தை பெயருக்குத்தான் படித்தார்கள். இதன் விளைவாக ஆங்கிலத்தைவிட இந்தியில் பேசுவதையே எங்கும் அவர்கள் விரும்புகிறார்கள்

மக்களுக்கு நன்மை

மக்களுக்கு நன்மை

இதனால் அந்த மாநில மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் தமிழகத்தை தவிர ஏனைய எந்த மாநில மக்களுடன் இப்போது சரளமாக பேச முடிகிறது. ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் தாய்மொழியை விலையாக கொடுத்துவிட்டார்கள்.

தாய்மொழியில் கலந்த ஹிந்தி

தாய்மொழியில் கலந்த ஹிந்தி

இதன் காரணமாக பீகார், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, அஸ்ஸாம், வங்காளம் என அனைத்து மாநில மக்களுமே தங்கள் தாய்மொழியைவிட சரளமாக இந்தியில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். அவர்களது தாய்மொழிக்குள் பிரிக்க முடியாத அளவுக்கு இந்தி கலந்துவிட்டது. இந்த கலப்பை தெரிந்தே ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.

ஆங்கிலத்துக்கு மாற்று

ஆங்கிலத்துக்கு மாற்று

இதன் காரணமாக பீகாரில் இருந்த போஜ்பூரி மொழி, மகாஹி மற்றும் மைதிலி மொழிகள் குறுகிய வட்டத்தினர் பேசிக்கொள்ளும் மொழியாக அழிந்துவிட்டது. பீகார் மட்டுமல்ல வடக்கே உள்ள 15க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்தி தான் பேசும் மொழியாக மாறிக்கிடக்கிறது. அனைத்து மாநிலங்களுமே இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக பயன்படுத்துகின்றன.அவர்களின் மொழியை இந்தி கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிவிட்டது. தமிழைப் போல் அப்படியே இன்னும் எந்த மொழியும் இயல்பு மாறாமல் அப்படியே இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை.

English summary
how hindi dominate in north india states, how north indian loss mother-tongue, deatail here
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X