‛டாஸ் தோற்ற பாகிஸ்தான்’.. ஜனாதிபதி வந்த ‛சாரட் வண்டி’.. இந்தியாவுக்கு கிடைத்தது எப்படி? சுவாரசியம்
டெல்லி: 40 ஆண்டுக்கு பிறகு குடியரசு தினவிழாவில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்முவும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் சாரட் வண்டியில் பயணம் செய்தனர். இது அனைவரையும் கவர்ந்த நிலையில் அந்த சாரட் வண்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி இருந்ததும், இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்று சாரட் வண்டியை கைப்பற்றியது எப்படி? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். சென்னை காமராசர் சாலையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி தேசியக்கொடியை ஏற்றினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

அதேபோல் டெல்லியில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடமை பாதையில் (கர்த்தவ்ய பாதை) நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விழாவில் பங்கேற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட ஏராளமானவர்கள் விழாவை கண்டு ரசித்தனர். இந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
முன்னதாக குடியரசு தினவிழாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் இருந்து திரெளபதி முர்மு மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் விழா நடக்கும் கடமை பாதைக்கு ‛‛சாரட் வண்டியில்'' வந்தனர். ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர் குடியரசு தினவிழாவுக்கு சாரட் வண்டியில் வருவது 40 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இந்த சாரட் வண்டியை 6 கருப்பு நிற குதிரைகள் இழுத்து வந்தன.
கருப்பு நிறத்திலான இந்த சாரட் வண்டியின் ஆங்காங்கே தங்க முலாம் பூசப்பட்டு இருந்தது. வண்டியின் உள்ளே சிவப்பு நிற ‛வெல்வெட்' இருக்கையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் அமர்ந்து பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி விழா நடக்கும் இடத்துக்கு வந்தனர்.
பொதுவாக குடியரசு தினவிழாவுக்கு வரும் ஜனாதிபதி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் குண்டு துளைக்காத சொகுசு காரில் வருவார்கள். ஆனால் இந்த முறை ‛சாரட்' வண்டியில் வந்தது வித்தியாசமாக இருந்ததோடு, அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. இந்நிலையில் தான் இந்த ‛சாரட் வண்டி' யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி இருந்ததும், இறுதியில் அதனை டாஸ் மூலம் இந்தியா வென்று கைப்பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இந்த சாரட் வண்டி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகும். அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் வைஸ்ராய்க்கு இந்த சாரட் வண்டி வழங்கப்பட்டது. அவர் தனது பணி மற்றும் வைஸ்ராய் தோட்டத்தை சுற்றிப்பார்க்க இந்த வண்டியை பயன்படுத்தினார்.
இதற்கிடையே தான் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டது. சாரட் வண்டி டெல்லியில் இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்போது சாரட் வண்டிக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடியது. இந்தியா அதனை விட்டு கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ‛சாரட் வண்டி' யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயம் செய்ய டாஸ் போடப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங்கும், பாகிஸ்தான் சார்பில் சஹாப்ஜாதா யாகூப் கான் ஆகியோர் பங்கேற்றனர். இந்த டாஸ் போட்டியில் இந்தியாா வென்றது. இதன்மூலம் ‛சாரட்' வண்டி இந்தியாவுக்கு சொந்தமானது. அதன்பிறகு இந்த வாகனத்தை இந்திய ஜனாதிபதிகள் பயன்படுத்த தொடங்கினர்.
இதற்கு முன்பு ஜனாதிபதி பதவியேற்பின்போது இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு குடியரசு தினவிழாவை முடித்து படை வீரர்கள் முகாம் திரும்பும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும்போது ஜனாதிபதிகள் இதனை பயன்படுத்தினர். அதன்பிறகு இந்த வாகன பயன்பாடு என்பது நிறுத்தப்பட்டது. திறந்த நிலையில் இரப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாகனத்தை பயன்படுத்துவதை ஜனாதிபதிகள் தவிர்த்தனர். இதையடுத்து குண்டு துளைக்காத கார்கள் பயன்படுத்தப்பட்டன.
இதையடுத்து கடந்த 2014 குடியரசு தினவிழாவில் இருந்து வீரர்கள் முகாம் திரும்பும் நாளான ஜனவரி 29ல் இந்த வண்டியை அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பயன்படுத்தினார்.ஆனாலும் அவரும் குடியரசு தினவிழாவுக்கு வரும்போது பயன்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்மு சாரட் வண்டியை குடியரசு தினவிழாவுக்கு வரும்போது பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications