டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளின் புகலிடமா தமிழகம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் என்ஐஏ அதிகாரிகள் தொடர் சோதனை- வீடியோ

    டெல்லி: சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் புகலிடமா தமிழகம் என கேள்வி எழுப்பும் வகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளின் சோதனைகளும் கைது நடவடிக்கையும் தொடர்கின்றன.

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரமான 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி தொடர் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டது. இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.

    இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை பேசிய அல் - உம்மா அமைப்பினர் இத்தாக்குதல்களை நடத்தினர். இதையடுத்து ஒட்டுமொத்தமாக அந்த இயக்கத்தின் தலைவர் பாட்சா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அல் உம்மா இயக்கமும் தடை செய்யப்பட்டது.

    ஜனநாயக இயக்கங்கள்

    ஜனநாயக இயக்கங்கள்

    இதனைத் தொடர்ந்து புதிய இஸ்லாமியர் நலன் பேசும் அரசியல் இயக்கங்கள் உருவாகின. இதில் கடும்போக்கு இஸ்லாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த விரும்பும் அமைப்புகளும் இருந்தன. ஆனால் எந்த ஒரு இயக்கமும் மதத்தின் பெயரிலான பயங்கரவாத செயல்களை ஆதரித்ததில்லை.

    தமிழகத்தின் முதல் ஐ.எஸ்.தீவிரவாத்இ

    தமிழகத்தின் முதல் ஐ.எஸ்.தீவிரவாத்இ

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக்,சிரியா என பல நாடுகளில் சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபம் எடுத்து நின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வலியுறுத்தும் அந்த இயக்கத்தின் தொடக்க கால வெற்றி பல்வேறு நாடுகளில் இளைஞர்க்கள் சிலருக்கு ஈர்ப்பை ஈடுபடுத்தியது. இதனடிப்படையில் கடலூரைச் சேர்ந்த கஜா பக்ருதீன் என்கிற இளைஞர் ஒருவர் 2014-ம் ஆண்டு சிங்கப்பூர் வழியாக சிரியா என்று ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார். அதே காலகட்டத்தில் தங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவாளர்களாக வெளிப்படுத்துவதிலும் இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பின்விளைவுகளை ஆராயமல் ஆர்வக்கோளாறில் பதிவிட்டு சிக்கினர்.

    ராமநாதபுரம் இளஞர்கள் கைது

    ராமநாதபுரம் இளஞர்கள் கைது

    கஜா பக்ருதீனை தொடர்ந்து கடலூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினியர் ஒருவரும் சிங்கப்பூரில் இருந்து வெளியேறி ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார். அவரை அண்மையில் சிங்கப்பூர் இந்தியாவுக்கு நாடு கடத்தியிருந்தது. 2014-ம் ஆண்டு ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முகமது ரிஸ்வான் ஆகியோர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க சீருடையை விநியோகத்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கஇது செய்தனர். தொண்டியைச் சேர்ந்த 26 இளைஞர்கள் தங்களை ஐ.எஸ்.இயக்கத்தினராக அடையாளப்படுத்தி சமூக வலைதளங்களில் படங்களை வெளியிட்டிருந்தனர்.

    கோவை- திண்டிவனம்- சென்னை

    கோவை- திண்டிவனம்- சென்னை

    பின்னர் கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரு இளைஞரை கைது செய்து விசரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்களாக இருந்த 5 பேர் கோவையில் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திண்டிவனத்தில் 2 பேர், சென்னையில் 3 பேர் பிடிபட்டனர். இவர்களில் திண்டிவனம் இஸ்மாயில் ஐ.எஸ்.ஐ.எஸ்.. இயக்கத்துடன் நேரடி தொடர்பில் இருந்தவர். விநாயகர் சதுர்த்தி நாளில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.

    லிபியாவில் சிக்கிய நசீர்

    லிபியாவில் சிக்கிய நசீர்

    2016-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த முகமது நசீர் குறித்த தகவல்களை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் வெளியிட்டனனர். சூடானில் இருந்து லிபியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ்.. இயக்கத்தில் இணைந்த இளைஞர் முகமது நசீர். இவரும் லிபியாவில் பிடிபட்டு பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர் சென்னை எம்.என்.எம். கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படித்தவர்.

    சசிகுமார், பரூக் படுகொலைகள்

    சசிகுமார், பரூக் படுகொலைகள்

    அதே 2016-ம் ஆண்டு கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொல்லப்பட்டார். 2017-ல் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நாத்திகரான பாரூக், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் கோவை பகுதிகள் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள் கவனம் திரும்பியது.

    3 ஆண்டுகளாக சோதனை

    3 ஆண்டுகளாக சோதனை

    கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு சந்தேக நபர்கள் பலரது வீடுகள், பணிபுரியும் இடங்க்களில் சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தென்னிந்திய தளபதியான முகமது அசாருதீனும் அவரது கூட்டாளிகளும் சிக்கியுள்ளனர் என்கின்றன என்.ஐ.ஏ. வட்டாரங்கள்.

    English summary
    National Investigation Agency is tracking the roots of the Islamic State in the Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X