டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மொத்தம் 4 படிகள்.. ஆன்டி-சாட் துல்லியமாக தாக்கியது இப்படித்தான்.. அசரவைக்கும் வீடியோ வெளியானது!

மிஷன் சக்தி மூலம் ஏ-சாட் ஏவுகணை எப்படி விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழித்தது என்று தற்போது வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: மிஷன் சக்தி மூலம் ஏ-சாட் ஏவுகணை எப்படி விண்வெளியில் செயற்கைக்கோளை தாக்கி அழித்தது என்று தற்போது வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. வீடியோ மூலம் இந்த சாதனை விளக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் மிஷன் சக்தி விண்வெளி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நிய நாட்டின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுள்ளது.

பல வருட உழைப்பிற்கு பின் இந்தியா இந்த விண்வெளி வல்லமையை பெற்றுள்ளது. மொத்தம் 4 படிகள் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்! எந்த செயற்கைகோள்.. யார் அனுப்பிய செயற்கைகோள்.. விடைகிடைக்காத கேள்விகள்.. பதில் சொல்லுங்க சார்!

முதல் படி என்ன

முதல் படி என்ன

முதல்படியில் பூமியில் இருக்கும் ரேடார் மூலம் செயற்கைகோள் கண்காணிக்கப்படும். அதன் நகர்வை வைத்து அது எங்கு செல்லும் என்று கணிக்கப்படும். இந்த தகவல், ஏ-சாட் ஏவுகணைக்கு அனுப்பப்படும். உடனே ஏ-சாட் ஏவுகணை ஏவப்படும்.

இரண்டாம் படி

இரண்டாம் படி

இரண்டாம்படியில் ஏ-சாட் ஏவுகணை வேகமாக செங்குத்தாக, அந்த செயற்கைகோள் செல்லும் உயரம் வரை செல்லும். அதன்பின் குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும், ஏ-சாட் ஏவுகணையில் உள்ள பாதி பாகங்கள் கழன்று விழும். முதற்கட்ட எரிபொருள் தீர்ந்ததும் அதன் பாகங்கள் கழன்று விழும்.

மூன்றாவது

மூன்றாவதாக, ஏ-சாட் ஏவுகணையின் பாதை மாற்றப்படும். சரியாக செயற்கைக்கோளை குறி வைத்து ஏ-சாட் ஏவுகணையின் பாதை மாற்றப்படும். பின் மீண்டும் காலியான எரிபொருளின் பாகங்கள் ஏ-சாட் ஏவுகணையில் இருந்து கழன்று விழும்.

கடைசி படி

கடைசியாக தாக்கப்பட வேண்டிய செயற்கைகோள் ஏ-சாட் ஏவுகணை மூலம் லாக் செய்யப்படும். சரியாக துல்லியமாக, ரேடாரில் இருந்து சிக்னல் கிடைத்ததும் ஏ-சாட் ஏவுகணை மூலம் செயற்கைகோள் தாக்கி அழிக்கப்படும். இதுதான் இதன் நடைமுறை. இந்த தாக்குதல் சம்பவம் தற்போது அப்படியே வீடியோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

English summary
How Mission Shakthi executed with the help of an Anti - Sat: Here is the animated explanation video.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X