டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமைச்சர்கள் சம்பளம், பிரதமர் அலுவலக செலவு.. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1258 கோடி!

அமைச்சர்களின் சம்பளம் உள்ளிட்ட கேபினட் செலவினங்களுக்காக ரூ. 1258 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய அமைச்சரவையின் பல்வேறு செலவினங்களுக்காக ரூ.1,258.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சம்பளம், வெளிநாட்டு விருந்தினர்களுக்கான செலவு ஆகியவை இதில் அடங்கும்.

2023-24-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமையச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மத்திய அமைச்சரவையின் பல்வேறு செலவினங்களுக்காக ரூ.1,258.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவைக்கான ஒதுக்கீடு கடந்த பட்ஜெட்டில் ரூ.300 கோடியாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.1,258 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்க்கு நிதி இல்லை! தமிழ்நாட்டிற்கு பெரிய ஏமாற்றம்! ஸ்டாலின் அதிருப்தி!மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ்க்கு நிதி இல்லை! தமிழ்நாட்டிற்கு பெரிய ஏமாற்றம்! ஸ்டாலின் அதிருப்தி!

அமைச்சரவைக்கு ரூ.1,258 கோடி

அமைச்சரவைக்கு ரூ.1,258 கோடி

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மத்திய அமைச்சரவையின் பல்வேறு செலவினங்களுக்காக ரூ.1,258.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களின் சம்பளம், வெளிநாட்டு விருந்தினர்களுக்கான செலவுகளும் அடங்கும். பிரதமர் அலுவலகத்திற்கான செலவுகள், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் மற்றும் முன்னாள் ஆளுநர்களுக்கான செயலகம் ஆகியவற்றின் செலவுகளும் இந்த தொகையில் அடங்கும்.

 அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ்

அமைச்சர்கள் சம்பளம், அலவன்ஸ்

இந்த 1258 கோடியில் பெரும்பகுதி, அதாவது ரூ. 832.81 கோடி அமைச்சர்கள் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் சம்பளம், மற்றும் இதர அலவன்ஸ் மற்றும் பயணங்களுக்கான செலவினங்களுக்காக ரூ. 832 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவிஐபிகளுக்கான சிறப்பு விமான சேவைகளுக்கான நிதியும் இதில் அடங்கும்.

அமைச்சரவை செயலகம்

அமைச்சரவை செயலகம்

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு அதன் நிர்வாக செலவுகளுக்காக ரூ.185.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்துக்கு ரூ.96.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலகத்திற்கு ரூ.71.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் இரசாயன ஆயுத மாநாட்டின் (CWC) நிர்வாகச் செலவுகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக செலவுகள்

பிரதமர் அலுவலக செலவுகள்

பிரதமர் அலுவலகத்துக்கு ரூபாய் 62.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகச் செலவுகள் இந்த நிதியிலிருந்து செலவழிக்கப்படும். அரசு விருந்தோம்பல் மற்றும் வெளி மாநில விருந்தினர்களின் பொழுதுபோக்கிற்கான செலவு, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் சார்பாக ராஷ்டிரபதி பவனில் ஏற்பாடு செய்யப்படும் விருந்து நிகழ்வுகள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற விழாக்கள் நடைபெறும்போதான செலவுகளுக்காக ரூ.6.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆளுநர்களுக்காக ரூ.1.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

English summary
Rs 1,258.68 crore has allocated in Union budget 2023-24 for various heads of expenditure of Union cabinet, including salaries, and travel by ministers and entertainment of foreign state guests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X