டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியப் பொருளாதாரத்தில் முடங்கிக் கிடக்கும் சீனப் பணம்.. இவ்வளவு குவிஞ்சு கிடக்கா?.. பரபர தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுக்கு இந்தியா எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் பதிலடி கொடுக்கவில்லை. இந்தியப் பொருளாதாரத்திலும் இந்தியா திருப்பி அடித்து வருகிறது. ஆம் நமது பொருளாதாரத்தில் சீனாவின் பணம் முடங்கி கிடக்கிறது.

கடந்த 45 ஆண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அவ்வப்போது அத்துமீறல்கள், எல்லைத் தாண்டல்களை செய்து சீனா, இந்தியாவை சீண்டி வருகிறது.

சீனாவுக்கு எல்லை பிரச்சினை சற்று சிக்கலானது. ஆனால் பொருளாதாரமோ அதை விட மேலும் சிக்கலானது. கடந்த 2008-ஆம் ஆண்டு உலக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போது சீனா தனது பொருளாதாரத்தில் சரியான உயரத்தை அடைந்தது.

சீனாவை ஒருபோதும் நம்பக்கூடாது.. மோதலை நினைவு கூர்ந்த 1962ல் போரில் பங்கேற்ற வீரர்கள்சீனாவை ஒருபோதும் நம்பக்கூடாது.. மோதலை நினைவு கூர்ந்த 1962ல் போரில் பங்கேற்ற வீரர்கள்

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த உயர்நிலை அமெரிக்காவின் பணமதிப்பு வீழ்ச்சியினாலும் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட போர்களினாலும் நிகழ்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக உலகின் ஒவ்வொரு நாடும் சீனாவுடனான நட்பை ஆழப்படுத்தியுள்ளது. அதுபோல் மிகப் பெரிய பொருளாதார சக்தியான இந்தியாவும் அவ்வாறாகவே இருந்தது.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

ஒரு நாட்டின் சீன முதலீடுகள் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு துறைகளில் நேரடி மற்றும் பெருநிறுவன தலையீடு மூலம் வருகின்றன. இந்தியாவில் சீனாவின் அன்னிய நேரடி முதலீடு 2.34 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் சீன முதலீடுகள் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. இன்னும் சில சிந்தனை அமைப்பினர் 8 டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

சீனா

சீனா

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் மூலம் சீனாவிலிருந்து கூடுதலாக 550 மில்லியன் டாலர் இந்தியாவுக்கு கிடைக்கிறது. இந்தியாவில் புதிதாக தொழில் தொடங்கும் துறைகளில் சீன முதலீடுகளுக்கான சில தகவல்களை கூகுள் காட்டுகிறது. அதன் அடிப்படையில் அலிபாபா, ஜியாமி, டென்சென்ட், சீனா- யுரேசியா பொருளாதார ஒத்துழைப்பு நிதி, தீதீ சூசிங், சுன்வீ கேபிடல், ஃபோசன் கேபிட்டல் ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்த சீன நிறுவனங்களாகும்.

Recommended Video

    Boycott China Tiktok, Zoom உள்ளிட்ட 52 Chinese Appsகளை முடக்க Indian intelligence agencies பரிந்துரை
    ஓலா

    ஓலா

    அது போல் பேடிஎம், ஓலா, ஸ்னாப்டீல், ஸ்விக்கி ஆகிய சீன நிறுவனங்கள் மூலமும் இந்தியாவுக்கு முதலீடு கிடைக்கிறது. பேடிஎம்மில் அலிபாபாவும், ஓலாவில் சீனா- யுரேசியா பொருளாதார ஒத்துழைப்பு நிதி மற்றும் தீதீ சூசிங் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

    23 சதவீதம்

    23 சதவீதம்

    இந்தியாவில் புதிதாக தொடங்கிய நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 5.5 பில்லியன் டாலர் அளவுக்கு சீன முதலீடுகள் உள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. எனவே இந்திய பொருளாதார அமைப்பில் சீனாவின் பணம் ஏராளமாக உள்ளது. சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா லாபம் அடைந்துள்ளது. கடந்த 2016- 2019 ஆம் ஆண்டு 23 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    5 ஜியின் அடுத்த தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இந்திய பொருளாதாரத்தில் சீனாவின் இருப்பு மிக அதிகமாகவே இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஆலோசனைக்கு எதிராக தொழில்நுட்பத்தில் அசுர பலம் பெற்றிருக்கும் சீனாவின் ஹூயாவீ நிறுவனத்தின் 5 ஜி சோதனை ஓட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எல்லையில் சீனாவின் அத்துமீறலால் ஏற்பட்டு வரும் பதற்றங்களை அடுத்த சீனாவின் முதலீடு குறித்து இந்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என தெரிகிறது.

    English summary
    Do you know How Much Chinese money is in our Indian Economy?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X