டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுனால் ரயில்வேக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு எவ்வளவு? பியூஷ் கோயல் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா லாக்டவுன் காரணமாக இந்திய ரயில்வேக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பது குறித்து லோக்சபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்துள்ளார்.

சி.என்.அண்ணாதுரை, சையது இம்தியாஸ் ஜலீல், கட்டிகவுடர், ராகுல் ரமேஷ், தனுஷ் குமார், அசாதுதின் ஓவைசி, திருநாவுக்கரசர், ஸ்ரீதரன் ஆகியோர் லோக்சபாவில் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து, பியூஷ் கோயல் அளித்த பதிலை பாருங்கள்:

How much loss of revenue due to lockdown for Indian railway

கொரோனா தொற்றுநோயின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரயில்வே வழக்கமான பயணிகள் ரயில் சேவைகளை 23.03.2020 முதல் நிறுத்தியது. 39 நாட்களுக்கு நிறுத்தப்பட்ட பின்னர் பயணிகள் ரயில் சேவைகளின் செயல்பாடு, அரசு வழங்கிய வழிகாட்டுதலின் படி, 01.05.2020ல் மீண்டும் தொடங்கியது.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மட்டும் அப்போது இயக்கப்பட்டன. மாநில அரசுகளின் பரிந்துரைகளையும் கவலைகளையும் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே படிப்படியாக பயணிகள் ரயில்களின் சேவையை சிறப்பு ரயில் சேவை என்ற அடிப்படையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

How much loss of revenue due to lockdown for Indian railway

ராஜதானி சிறப்பு ரயில்கள், 12.05.2020 முதல் இயங்குகின்றன. முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் காரணமாக 10.09.2020 வரை பணம் திரும்ப கொடுக்கப்பட்டது. ரயில்வே பயணிகள் டிக்கெட் வருமானம், 41,844.31 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிட்டால் இது 42.3% குறைவாகும்.

தமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டாலும்.. நாங்க இருக்கோம்.. உலகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இதன் விளைவாக, ரயில்வேயின் போக்குவரத்து வருவாய், 8 41,844.31 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை விட 42.3% குறைவாகும்.

சரக்கு போக்குவரத்து வருவாயை அதிகரிப்பதற்காக சரக்குக் கொள்கையை எளிமைப்படுத்த இந்திய ரயில்வே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

English summary
Upto the end of August 2020, the number of originating passengers has been 1.27% of the corresponding period last year and freight loading has been 86.6% of the corresponding period last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X