ஓமிக்ரான் உடலுக்கு நல்லதா?.. தென்னாப்பிரிக்கா சயின்டிஸ்ட்கள் இப்படி சொல்றாங்களே!.. இது நடக்குமா?
டெல்லி: கொரோனா வைரஸ் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பது இந்த உலக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இந்த வைரஸோ இரு ஆண்டுகளாக நம்மை ஆட்டி படைத்து வருகிறது.
ஆல்பா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான், டெல்மிக்ரான், டெல்டாகிரான் என பல்வேறு நவீனமயமான பெயர்களில் உருமாறி கொண்டே இருக்கிறது. தற்போது ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா 3-ஆவது அலை, 4-ஆவது அலை ஏற்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய வேரியண்ட் டெல்டாவை காட்டிலும் வேகமாக பரவக் கூடியது. அதே வேளையில் குறைந்த அளவிலான பாதிப்பையே கொடுத்து வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறேன். டெல்டாவை போன்ற தீவிர பாதிப்பையும் உயிரிழப்பையும் ஓமிக்ரான் ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தை ஓவர்டேக் செய்த கேரளா.. மின்னல் வேக கொரோனா பாரவலுக்கு ஓமிக்ரான் காரணமா?

கொரோனா கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் பல நாடுகளில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் என இருப்பதால் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. எனவே இது எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சில மருத்துவ நிபுணர்கள் இந்த கொரோனா வரும் மார்ச் 11 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரான் வேரியண்ட்
இந்த நிலையில் ஓமிக்ரான் வேரியண்ட் உருவான தென்னாப்பிரிக்காவில் உள்ள நிலவரத்தை சில விஞ்ஞானிகள் கருத்தில் கொள்கிறார்கள். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் டெல்டா வேரியண்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தடுப்பூசி போட்டிருந்தால் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் டெல்டாவால் பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதை கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் பாதித்த 23 பேரின் மாதிரிகள் மூலம் கண்டறிந்தனர்.

கொரோனா எப்போது முடியும்?
ஓமிக்ரான் வேரியண்ட் கோவிட் 19-க்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சரக்தியை தருகிறது. அதிலும் ஒருவர் தடுப்பூசி போட்டிருந்தால் அவருக்கு சிறப்பான நோய் எதிர்ப்பாற்றலை தருகிறது. கொரோனா தொற்று நோயை ஓமிக்ரான் முடிவுக்கு கொண்டு வருவதாக இருக்கலாம் என்கிறார் விஞ்ஞானிகள். எனவே ஓமிக்ரான் கொரோனா தொற்றின் முடிவின் முன்னோடியாக இருக்கலாம். ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த அளவிலான பாதிப்புகளையே தருகிறது.

ஓமிக்ரான் செய்வது என்ன?
ஒரு தொற்று நோய் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கும் போது மந்தை எதிர்ப்பு சக்தி மற்றும் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் ஆகியவற்றால் தொற்றுநோயை முடிவுக்கு கொண்டு வரும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். எப்படியோ கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மக்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா முடிவுக்கு வந்தால் சரிதான்.