டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவுடன் லடாக்கில் மோதல் நிலவி வரும் நிலையில் இன்று இந்தியா கார்கில் போரில் பயன்படுத்திய ஆபரேஷன் விஜய் திட்டத்தை நினைவு கூறுகிறது.

காஷ்மீரில் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றதை நினைவுகூரும் விதமாக இன்று கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாடப்படுகிறது. 21வது கார்கில் போர் வெற்றி நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கார்கில் போர் வெற்றிக்கு வழி வகுத்த ஆப்ரேஷன் விஜய் திட்டத்தை கொண்டாடும் வகையில் இந்த நாள் நினைவு கூறப்படுகிறது.

Recommended Video

    Karigil நினைவு தினம்: பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்

    இதற்காக இன்று தேசிய போர் நினைவு சின்னத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார். இந்த போரில் இந்தியா வெற்றிபெற ஆபரேஷன் விஜய் முக்கிய காரணமாக இருந்தது, அது என்ன ஆபரேஷன் என்று இங்கே பார்க்கலாம்.

    இன்று கார்கில் போர் வெற்றி தினம்: தீரத்தோடு போரிட்டு உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு சல்யூட் இன்று கார்கில் போர் வெற்றி தினம்: தீரத்தோடு போரிட்டு உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு சல்யூட்

    போர் நடந்தது

    போர் நடந்தது

    கார்கில் போர் 1999ல் நடைபெற்றது. 1999 மே 3ம் தேதி தொடங்கிய போர் ஜூலை 26ம் தேதி வரை நடந்தது. இந்த போர் கார்கில் பகுதியை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டது. காஷ்மீரில் பாகிஸ்தான் செய்திருந்த ஆக்கிரமிப்பை காலி செய்யவே இந்த போர் நடந்தது. கார்கில் பகுதியில் இருந்து டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களை கைப்பற்ற இந்த போர் நடந்தது.

    உளவு தகவல்

    உளவு தகவல்

    ஆடு மேய்த்தவர் ஒருவர் கொடுத்த உளவு தகவலின் மூலம் கார்கில் உள்ளே பாகிஸ்தான் ராணுவம் புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டு, இந்திய படைகள் தயார் செய்யப்பட்டது. இங்கு முதலில் நடந்த சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள். கேப்டன் சோரப் கைலா உட்பட 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதன்பின்தான் கார்கில் போர் அதிகாரபூர்வமாக தொடங்கியது,

    டைகர் மலை

    டைகர் மலை

    கார்கிலை இணைக்கும் அனைத்து சாலையிலும் குண்டுகளை பாகிஸ்தான் வீசியது. இதனால் கார்கில் தனித்து விடப்பட்டது. இதனால் இந்தியா விமானப்படை மூலம் போரை பல இடங்களில் முன்னெடுத்தது. இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இருந்து டைகர் மலையை பாகிஸ்தானை கைப்பற்றியது. இந்த போரில் கார்கில் பகுதியில் இருந்த டைகர் மலைதான் மிக முக்கியமான திருப்பு முனையாக இருந்தது .

    ஆபரேஷன் விஜய் இந்தியா

    ஆபரேஷன் விஜய் இந்தியா

    முதலில் இந்திய விமானப்படை இங்கு பெரிய அளவில் உதவ முடியாமல் திணறியது. காரணம் டைகர் மலை நம்முடைய கையில் இல்லை. இதற்காக இந்தியா போட்ட திட்டம்தான் ஆபரேஷன் விஜய். ஆனால் இந்த ஆபரேஷன் தொடக்கத்தில் இந்தியா கொஞ்சம் சறுக்கியது. வரிசையாக MiG-21 மற்றும் MiG-27, மிக் 17 விமானத்தை இந்தியா இழந்தது. இதில் ஒரே நாளில் 4 விமானப்படை அதிகாரிகள் பலியானார்கள்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் தொடர்ந்து விடாமல் பாகிஸ்தான் வீரர்களை இந்திய விமானப்படை சுற்றி வளைத்து. பாகிஸ்தான் டாங்கிகளிடம் இருந்து தப்பித்து அசாத்திய திறமையுடன் இந்திய விமானப்படை டைகர் மலைக்கு சென்றது , டைகர் மலையை மொத்தமாக விமானப்படை உதவியுடன் சுற்றி வளைப்பதுதான் இந்த ஆபரேஷன் விஜயின் திட்டமாகும். அது இந்தியாவிற்கு கை கொடுத்தது. விமானப்படை உதவியுடன், டைகர் மலை பகுதியை ஜூலை மாதம் இந்தியா கைப்பற்றியது.

    உளவு தகவல்

    உளவு தகவல்

    MiG-21 மற்றும் MiG-27, மிக் 17 என்று நவீன விமானங்கள், உளவு தகவல்கள், பாகிஸ்தானின் வீக்னஸ், எங்கே அடித்தால் எளிதாக வெல்லலாம் என்று சரியான திட்டமிடல் மூலம் பாகிஸ்தான் கைப்பற்றி இருந்த டைகர் மலையை இந்தியா மீட்டது. இந்த போரில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்தது ஆப்ரேஷன் விஜய் வெற்றிபெற்றபின்தான். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து இந்த போர் பிளான் போடப்பட்டது என்கிறார்கள் .

    வெற்றி பெற்றது

    வெற்றி பெற்றது

    இதனை அடுத்த வரிசையாக இந்தியா அடுத்தடுத்த ஆக்கிரமிப்பு பகுதியை கைப்பற்றி வெற்றியை நோக்கி நகர்ந்தது. இந்த நிலையில் சரியாக ஜூலை மாதம் இரண்டாம் வாரம் கார்கில் பகுதியில் அனைத்து இடங்களையும் இந்தியா கைப்பற்றியது. பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த டைகர் மலை , ரொலோலிங் மலை, பத்ரா டாப், ஸ்ரீநகர் லே தேசிய நெடுஞ்சாலை தொடங்கி எல்லா இடங்களையும் இந்தியா மொத்தமாக கைப்பற்றியது. இதன் மூலம் ஜூலை 26ம் தேதி கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றி, இந்தியா கார்கில் போரில் வென்றது.

    சீனாவிற்கு எதிராக

    சீனாவிற்கு எதிராக

    தற்போது இதேபோல்தான் சீனா லாடக் எல்லையில் அத்துமீறி வருகிறது. இந்த முறை போர் என்று நடந்தால் அது கண்டிப்பாக வான்வெளி போராகவே இருக்கும். போர் விமானங்கள் மூலமுமே தாக்குதல்கள் நடக்கும் என்று கூறுகிறார்கள். அப்படி சீனாவுடன் விமானம் மூலம் வான்வெளி போர் நடந்தால் இந்தியா இதேபோல் திட்டங்களை வகுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆபரேஷன் விஜய் போலவே அதிரடி பிளான் ஒன்றை இந்தியா களமிறக்க வாய்ப்புள்ளது .

    English summary
    How Operation Vijay made India win in Kargil: Lesson for Pakisthan and China too in border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X