டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை "உயர்த்திவிட்டு" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம்

Google Oneindia Tamil News

டெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாம் என்ற முக்கிய தீர்ப்பை வழங்கிவிட்டு கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்றவர் பி. சதாசிவம்.

கேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் தற்போது அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். எனினும் இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பெருமை இவருக்கு உண்டு.

கேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் தற்போது விடுவிக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியில் கடப்பநல்லூரைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் சிவகாசியில் உள்ள பிஏ முடித்தார். இதையடுத்து சென்னை சட்டக் கல்லூரியில் அவர் நியமிக்கப்பட்டார்.

ஆளுநராக தமிழிசையை நியமித்து தமிழக பாஜகவுக்கு பெருமை சேர்த்த அமித்ஷாஆளுநராக தமிழிசையை நியமித்து தமிழக பாஜகவுக்கு பெருமை சேர்த்த அமித்ஷா

சிறப்பு அரசு வழக்கறிஞர்

சிறப்பு அரசு வழக்கறிஞர்

இவர் சென்னையில் வழக்கறிஞராக 1973-ஆம் ஆண்டு பதிவு செய்தார். பின்னர் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி உயர்வு பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்

கடந்த 1996-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2007-இல் மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

மாநில ஆளுநர்

மாநில ஆளுநர்

பின்னர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

சவுஹான்

சவுஹான்

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெசிக்கா லால் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அது போல் ரிலையன்ஸ் கேஸ் வழக்கில் சிறப்பான தீர்ப்பை வழங்கினார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கிலும் நீதிபதி பிஎஎஸ் சவுஹானுடன் இணைந்து தீர்ப்பளித்தார்.

சதாசிவம் அமர்வு

சதாசிவம் அமர்வு

ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது என சதாசிவம் அமர்வு தீர்ப்பளித்தது.

அமர்வு

அமர்வு

இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், ஒடிஸாவில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், பாகிஸ்தான் அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.

ஆணையத் தலைவர்

ஆணையத் தலைவர்

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராகச் செயல்பட்டவர்.

ஆளுநர்

ஆளுநர்

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம். இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான சதாசிவம் தற்போது ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.சதாசிவம் பதவி வகித்த காலத்தில்தான் குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்குகளில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
How Sadasivam elevated as Kerala Governor and retired from that post? Here are the full details of him and his historical judgements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X