டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம்.. எப்படி செயல்படுத்தும் காங்கிரஸ்.. பலனாளிகளுக்கு என்ன தகுதி தேவை?

Google Oneindia Tamil News

Recommended Video

    ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்... ராகுல் காந்தியின் அதிரடி திட்டம்- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் அறிவித்துள்ள ஏழைகளுக்கான குறைந்தபட்ச மாதாந்திர வருவாய் திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

    லோக்சபா தேர்தல் களைகட்டியுள்ளது. அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட, ஒரு அறிவிப்பு பெரும் புயலையே உருவாக்கியுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.6000 குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று, தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

    தமிழிசை, ஹெச். ராஜாவை ஆதரித்து பிரச்சாரம்.. ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடிதமிழிசை, ஹெச். ராஜாவை ஆதரித்து பிரச்சாரம்.. ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி

    அமர்த்தியா சென்

    அமர்த்தியா சென்

    இந்த திட்டம், பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், வகுத்த, ஏழ்மைக்கான வரையறை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தின், மாத வருமானம் ரூ.4000 அல்லது ரூ.8000 என்று வைத்துக்கொள்வோம். மாதம் ரூ.12 ஆயிரம் என்பது குறைந்தபட்ச வருமான இலக்கு என்பதால், முறையே, ரூ.8000 அல்லது ரூ.4000 மாத உதவித் தொகையாக வழங்கப்படும் என்று விளக்கம் அளித்தார் காங்கிரஸ் தலைவர் ஒருவர். பலனாளிகளை கண்டறிவதுதான் மிகப்பெரிய வேலையாகும். இதற்கு NSSO மற்றும் CSO உதவியை நாட திட்டமிடப்பட்டுள்ளது.

    பாஜக அரசு தள்ளுபடி

    பாஜக அரசு தள்ளுபடி

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் பதில் அளிக்கையில், 10-15 தொழிற்சாலைகளுக்காக ரூ.3,16,000 கோடியை பாஜக அரசு தள்ளுபடி செய்யும்போது, காங்கிரசால் ஏன் முடியாது என்று பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

    தமிழக சட்டசபை தொகுதிகள் முழு ரவுண்ட் அப் இதாங்க!

    அதிக நிதி ஒதுக்கீடு தேவை

    அதிக நிதி ஒதுக்கீடு தேவை

    இந்திய புள்ளியியல் நிறுவனத்தின், பொருளாதார நிபுணர், குர்பசன் சிங், கூறுகையில், 2019-20ம் ஆண்டு விலைவாசிப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.5 சதவீதம் அளவுக்கு அரசு வழங்கப்போகும் (ஒருவேளை காங். அரசு அமைந்து திட்டத்தை செயல்படுத்தினால்), நிதி அளவு இருக்கும் என்கிறார். இந்த திட்டத்தை செயல்படுத்துவது, மிகப்பெரிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்பதை இந்த புள்ளி விவரம் உணர்த்துகிறது.

    வறுமைக்கோட்டுக்கு மேலே வரும் மக்கள்

    வறுமைக்கோட்டுக்கு மேலே வரும் மக்கள்

    ரங்கராஜன் குழு கணக்கெடுப்புபடி, இந்திய மக்கள் தொகையில், 29.5 சதீவீதம், அதாவது 269 மில்லியன் மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளனர். கிராமங்களில் மாதம் ரூ.5000த்திற்கும் குறைவாக வருவாய் ஈட்டுவோரும், நகர்ப்புறங்களில், மாதம் ரூ.7,050 வருமானம் ஈட்டுவோரும் வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ளோர் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, ரூ.6000 அரசு வழங்கினால், குறைந்தபட்சமாக இவர்கள், மாதம் ரூ.12 ஆயிரம் என்ற அளவுக்கு மேல் வருவாய் ஈட்டும் பிரிவினராக மாற அதிக வாய்ப்பு உண்டு.

    English summary
    Congress Nyay scheme is based on Amartya Sen Index of poverty. Identifying the families is, however, a herculean task and the party aims to take NSSO’s and CSO’s help. It will be first run as a pilot project and then phase wise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X