டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிசம்பர் 31 காலக்கெடுவிற்கு முன் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி

Google Oneindia Tamil News

டெல்லி: உங்கள் பான் கார்டு உடன் ஆதார் எண்ணை நாளைக்குள் (டிசம்பர் 31 க்குள்) இணைத்துவிடுங்கள். அப்படி இணைக்காவிட்டால் உங்கள் பான் கார்டு செல்லாமல் போய்விடும். இதனால் வரும் ஆண்டில் நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகள் மேற்கொள்வது சிக்கலாகிவிடும்.

வருமான வரித் துறை பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. ஆதார் உடன் பான் இணைப்பதை கட்டாயமாக்கியது. குறிப்பாக வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யும்போது, அவசியம்.

How to link PAN with Aadhaar before Dec 31 deadline

அத்துடன் புதிய வங்கி கணக்கு துவங்க, லட்சத்தில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள. வருமான வரி விலக்கு பெற, 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய என பான் கார்டு இருந்தால் தான் பல விஷயங்களுக்கு பான் கார்டு அவசியம் ஆகும்.

எனவே உடனே வருமான வரித்துறையின் நேரடி வரிகள் இயக்கததின் இணையதள பக்கத்திற்கு உங்கள் பான் நம்பர், ஆதார் நம்பர், ஆதாரில் உள்ளபடி உங்கள் பெயர், ஆகியவற்றை டைப் செய்து, கீழே தோன்றும் கேப்ட்சியா வார்த்தை டைப் செய்து சப்மிட் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் உங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட முடியும். இப்படி இணைப்பதற்கு நாளை தான் கடைசி தேதியாகும். அதாவது டிசம்பர் 31ம் தேதி தான் கடைசி தேதியாகும்.

ஆதார் இணைக்கும் காலக்கெடு ஏற்கனவே செப்டம்பர் 30 முதல் 2019 இல் இருந்து பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் நாளை தான் கடைசி தேதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்பிறகு அரசு நீட்டிப்பு வழங்குமா என்பது கேள்விக்குறி தான். இதேபோல் இணைக்காதவர்களுக்கு அடுத்து அரசு என்ன அறிவிப்பு வெளியிடும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு ஆரணி சேவூர் ஊராட்சியில் ஒரு ஓட்டுக்கு 25 கிலோ அரிசி மூட்டை.. அதிமுக வேட்பாளர் வழங்கியதால் பரபரப்பு

English summary
PAN-Aadhaar linking: How to link PAN with Aadhaar before Dec 31 deadline
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X