டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தி திணிக்கப்படுமா, தடுக்கப்படுமா.. அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் ஆலோசனைக்கு மத்திய அரசு அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தித் திணிப்பு விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அழைப்புவிடுத்துள்ளது.

ஜூன் 22ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை வரைவு ஒன்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

HRD ministry calls state education ministers meet

உயர் கல்வி சீர்திருத்தம் முதல் கல்வித் துறையில் தொழில்நுட்ப பயன்பாடு வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

புதிய கல்வி வரைவுத் திட்டத்தில் ஹிந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் புகுத்துவதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட, தென்மாநிலங்களில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்ட நிலையில், அது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

விவசாயி.. இயற்கை விவசாயி.. பிரமிக்க வைக்கும் பெரியார் தோட்டம்.. சபாஷ் போடுங்க மக்களே!விவசாயி.. இயற்கை விவசாயி.. பிரமிக்க வைக்கும் பெரியார் தோட்டம்.. சபாஷ் போடுங்க மக்களே!

விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையில், மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மும்மொழி பாடத்திட்டத்தை பள்ளிகளில் அறிமுகம் செய்யலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில அரசியல் கட்சியினர் மற்றும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஹிந்தியோடு வேறு பல பிராந்திய மொழிகளையும் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இவை அனைத்து குறித்தும் கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

English summary
The state education ministers meet on 22 June is a step in that direction and will try to build consensus in reform clause in the draft report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X