டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆன்லைன் கிளாஸ்: எல்கேஜி, யூகேஜிக்கு 30 நிமிடம்.. 1 டூ 12ம் வகுப்புக்கு எப்படி? வெளியான கால அட்டவணை

Google Oneindia Tamil News

டெல்லி: ஆன்லைன் வகுப்புகளுக்கான கால நேரம் உள்ளிட்டவை அடங்கிய, வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலால், கடந்த மார்ச் மாத 2வது வாரத்திற்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. எனவே நாடு முழுக்க, பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வாங்கிக் கொண்டு, ஆன்லைன் வகுப்புகளை கட்டாயப்படுத்தி ஆரம்பித்துள்ளன.

எல்கேஜி, யூகேஜி குழந்தைகள் முதல், ஆன்லைன் வகுப்புகள் துவங்குகிறது. இவர்கள், சிறு குழந்தைகளாக இருப்பார்கள். அப்படியான பிள்ளைகளிடம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் மொபைல் போனை கொடுத்து அவர்கள் அதை பார்க்கும்போது, உடல் மட்டுமின்றி, நிறைய மன உளைச்சல் சார்ந்த பிரச்சனைகளும் உருவாகுகிறது.

செங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சுசெங்கல்பட்டு டூ கல்பாக்கம்.. 9,170 மரக்கன்றுகளுடன் ஈசிஆரை இணைக்கும் அசத்தல் பசுமை சாலை வந்தாச்சு

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

இந்த நிலையில்தான், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அறிவிக்க உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வழிகாட்டும் நெறிமுறை இன்று மாலை வெளியிடப்பட்டது. நாடு முழுமைக்கும் இது பொருந்தும். மாற்றங்களை செய்து கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றாலும், பெரும்பாலும் அதை மாநில அரசுகள் செய்யாது.

எல்கேஜி, யூகேஜி எப்படி?

எல்கேஜி, யூகேஜி எப்படி?

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் வகுப்புகள் வேண்டாம். குறிப்பிட்ட நாளில், ஆன்லைன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட இந்த வகுப்புகளை பயன்படுத்தலாம்.

1 முதல் 8ம் வகுப்பு

1 முதல் 8ம் வகுப்பு

ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு 30 முதல், 45 நிமிடங்கள் வீதம் இரண்டு கட்டமாக வகுப்புகளை நடத்த வேண்டும். இந்த வகுப்புகள், ஒரே நாளைக்கு இரண்டு செஷன்களை வகுப்பு நேரம், தாண்டக் கூடாது. எந்தெந்த நாட்களில் வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்.

12ம் வகுப்பு வரை

12ம் வகுப்பு வரை

ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் என்றால் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகளில் பங்கேற்கலாம். ncert கல்வி காலண்டரில் குறிப்பிட்டுள்ள தேதிகள்படி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தலாம்.

9 முதல் 12ம் வகுப்புகள்

9 முதல் 12ம் வகுப்புகள்

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் ஒவ்வொரு வகுப்புகளை நடத்தலாம். வகுப்புகள் நடத்தும் நாட்களை, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில், செல்போன் முன்பாக குழந்தைகள் செலவிடும் நேரம் கட்டுப்படுத்தப்படும். இப்போது சில பள்ளிகள் தினமும் 8 மணி நேரம் கூட ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In an attempt to regulate the online classes being delivered to students across the country by schools, the union ministry of Human Resource Development (MHRD) issued guidelines to be followed by schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X