டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மனிதவள மேம்பாட்டுத்துறை - கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் பெயர் மாற்றம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் என்ற பெயரை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

HRD Ministry renamed as Education Ministry

இதனையடுத்து இனி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமானது கல்வி அமைச்சகம் என மாற்றி அழைக்கப்படும். மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

கருணையுடன் பார்க்க வேண்டிய குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடக்கிறார்களே எப்படி.. அன்புமணி கொதிப்புகருணையுடன் பார்க்க வேண்டிய குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடக்கிறார்களே எப்படி.. அன்புமணி கொதிப்பு

தற்போதைய புதிய கல்வி கொள்கையானது 1986-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 1992-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டது. 2014 லோக்சபா தேர்தலின் போதே பாஜகவால் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை.

English summary
Union Cabinet on Wednesday approved to renamed the HRD Ministry as Education Ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X