டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது.. தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும்.. இந்தியா டுடே சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: இப்போது தேர்தல் நடைபெற்றால், தொங்கு நாடாளுமன்றம்தான் அமையுமென்று 'இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ்' இணைந்து நடத்திய 'தேசத்தின் மனநிலை' என்ற கருத்துக் கணிப்பு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 எம்பிக்கள் பலம் தேவை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி 237 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடியும் என்றும், கடந்த தேர்தலை ஒப்பிட்டால் 99 இடங்கள் குறைவு என்றும் இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

Hung Parliament if elections held today: India Today

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 166 எதிரிகளை வெல்ல கூடும் என்றும் இது கடந்த முறையை விட 106 இடங்கள் அதிகம் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

140 தொகுதிகளில் பிற கட்சிகள் வெல்லக்கூடுமாம். எனவே தொங்கு நாடாளுமன்றம் தான் அமைய வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இணையும் பட்சத்தில் தனிப்பெரும் கூட்டணியாக இந்த கூட்டணி தான் உருவாக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

English summary
The Bharatiya Janata Party-led National Democratic Alliance (NDA) would lose its overwhelming majority in Parliament if Lok Sabha elections were to be held today, an extensive survey conducted across the country has found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X